பிரித்தானியா வெப்ப அலை பாதிப்பு! வரும் அடுத்த கட்டம்!

Must Read

பிரித்தானியாவில் 2026 மே,ஜூன் மாதங்களில் பதிவான சாதனை வெப்ப அலை காரணமாக,இதுவரை ஆயிர கணக்கான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் 2700+ உயிரிழப்புக்கள் ஏற்றப்பட்டதாகவும் இங்கிலாந்தின் வரலாற்றில் அதிக வெப்பம் ஜூன் மாதத்தில் பதிவானதாகவும் கூறப்படுகின்றது. அந்த குறிப்பிட்ட வெப்ப அதிகரிப்பே 42% இறப்புக்களுக்கு காரணம் என சொல்லப்படுகின்றது.

தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆறுகள் சுருங்கி,பசுமை நிலங்கள் காய்ந்து போயுள்ளன. விவசாயம்,நீர் வழங்கல் பாதிப்படைந்துள்ளன.பொருளாதார இழப்பு பில்லியன் பவுண்டுகளை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அடுத்த கட்ட வெப்ப அலைக்கு உரிய எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்த வெப்ப அலை காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. மெட் அலுவலகம் மற்றும் சுகாதார நிபுணர்கள், காலநிலை மாற்றம் இல்லையெனில் இத்தகைய தீவிர வெப்பம் ஏற்பட வாய்ப்பில்லை என எச்சரித்துள்ளனர். காட்டுத்தீ, வறட்சி அறிவிப்புகள், ஹோஸ் பைப் தடைகள் ஆகியவை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளன.

விவசாயிகள் பயிர் இழப்புகளால் தவித்து வருகின்றனர். நதிகளில் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து, மீன் இனங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அரசு நீர் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படும் என்பதால், நீண்டகால திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

பிரான்ஸில் அகதி விண்ணப்பம் நிராகரிப்பு: மாற்று வழிகள் மற்றும் உதவி அமைப்புகள் 

பிரான்சில் OFPRA மற்றும் CNDA ஆகிய இரண்டிலும் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் Déboutés de  l'asile என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு வழக்கமாக OQTF (வெளியேற்றல் உத்தரவு)...

பிரான்சில் 10 வருட கார்டு, குடியுரிமை: பிரெஞ்சு தேர்வு, புதிய சட்ட மாற்றங்கள்

பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான குடிவரவுச் சட்டத்தில் (Loi Immigration) செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்களின்படி, ரெசிடென்ஸ் கார்டுகள் மற்றும் குடியுரிமை பெறுவதற்கான பிரெஞ்சு மொழித் தகுதிகள் (Language...

ஓடிஸியிலிருந்து நம்மை அறிதல்

நேற்று கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹோமரின் ஓடிஸியை நானும் ஜீவியும் திரையரங்கில் சென்று பார்த்தோம். அதி அற்புதமான திரை அனுபவத்தையும் அதற்கீடான ஆழமான சிந்தனை அருட்டல்களையும்...

பிரான்ஸ் தமிழருக்கு 30 ஆண்டுகள் சிறை! நாட்டுக்கு அனுப்ப உத்தரவு!

யாழில் சிறுமி ஒருவருக்கு திருமண ஆசை காட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ் நீதிமன்றம்...

பிரான்சில் Dublin Transfer சிக்கல்: விரல் ரேகை விதி, சட்டபூர்வ வழிமுறைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Dublin Regulation) படி, ஒரு அகதி ஐரோப்பாவிற்குள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த அல்லது விரல் ரேகை (Eurodac...

ஊருக்கு போன இடத்துல பிறந்த நாள் கொண்டாட்டம்! இப்படியும் நடக்குது!

ஊரில பிறந்த நாள் ஒன்றுக்கு போனா,இரவு 9 மணியாச்சு, கேக் வெட்டினா பாடு இல்லை… இது என்னடா என்று சாப்பிட போன இடத்தில் கைக்கு எட்டினது...

More Articles Like This