பிரான்ஸ் லண்டனில் அதிகமாகும் போலி சாமிகள்! வளர்த்து விடும் தமிழ் அன்ரிகள்!

Published:

அண்மையில் லண்டனில் கைது செய்யப்பட்ட போலி சாமியாருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற கோணத்தில் சில ஈழ தமிழ் வர்த்தக குடும்பங்களை சேர்ந்தவர்கள் விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.கைதான குறித்த சாமியார் கேரளாவை சேர்ந்தவர் என்றும் ஈழ தமிழ் பூர்வீகத்தை சேர்ந்தவர்களே லண்டனுக்கு அவரை அழைத்து ஆன்மீக சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபட்டனர் என கூறப்படுகிறது.

பிரான்சிலும் இதே போன்று சிலரை அழைத்து வர தொடங்கியுள்ளனர்.. சில தமிழ் அன்ரிகளின் பக்தி முத்தி போகும் போதே இந்த மாதிரி ஆட தொடங்குகிறார்கள்.. இவர்கள் நினைப்பு , போலி பக்தி வேசங்களால் பல சமூக சீர்கேடுகளை உருவாக்கி வருகின்றனர். தவிர பல ஏழை தமிழ் கணவர்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணமும் இந்த மாதிரி விடயங்களுக்காக வீணே செலவழிக்கப்படுகின்றது.

அறத்தோடு யாருக்கும் எந்த தீமையும் மனதாலும் நினைக்காமல் இருக்கிற குடும்பத்தை சரியாக நடாத்தினாலே பெரும் தவம்! ஆனால் இவர்கள் அது எதுவும் செய்யாமல் ஊர் ஊலாத்துறதுக்கு பக்தியை கவசமாக்கி கொண்டு பல்லிளித்து கொண்டு திரிகிறார்கள். இவர்களின் பலவீனத்தை போலி சாமியார்கள் பயன்படுத்தி காசு உழைக்கிறார்கள்!

இனியாவது திருந்துவீர்களா..?

Related articles

spot_img

Recent articles

spot_img