பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் ஒவ்வொரு நபருக்கும் அன்றாட நிதிச் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஒரு வங்கிக் கணக்கு (Compte Bancaire) வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ஆனால், வெளிநாட்டவர்கள் அல்லது புதிய குடியிருப்பாளர்களுக்குச் சில வணிக வங்கிகள் கணக்கு தொடங்க மறுப்பது அடிக்கடி நிகழ்கிறது. இத்தகைய சூழலில் உங்களைப் பாதுகாக்கும் பிரெஞ்சு அரசின் சிறப்புச் சட்டமே Droit au Compte (வங்கிக் கணக்கு உரிமைகள்) ஆகும்.
- Droit au Compte என்றால் என்ன?
பிரெஞ்சு பணவியல் மற்றும் நிதிச் சட்டத்தின்படி (Code Monétaire et Financier), பிரான்சில் சட்டபூர்வமாகத் தங்கியிருக்கும் எவருக்கும் ஒரு அடிப்படை வங்கி கணக்கைப் பெறுவதற்கான முழு உரிமை உண்டு.
- மறுக்க முடியாத உரிமை: உங்களிடம் செல்லுபடியாகும் விசா,ரெசிடென்ஸ் கார்டு (Carte de Séjour) அல்லது தற்காலிகமாகத் தங்குமிடச் சான்று (Attestation) இருந்தும், ஒரு வங்கி உங்களுக்குக் கணக்குத் தொடங்க மறுத்தால், நீங்கள் பிரான்சின் மைய வங்கியான Banque de France அமைப்பை அணுகலாம்.
- Banque de France மூலம் கட்டாயக் கணக்குத் தொடங்கும் படிமுறைகள்
வங்கிகள் கணக்கு தொடங்க மறுக்கும் பட்சத்தில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
- Refus de Compte கடிதம் பெறுதல்: வங்கி உங்களுக்கான கணக்கைத் திறக்க மறுத்தால், அவர்களிடம் இருந்து Attestation de Refus d’Ouverture de Compte என்ற அதிகாரபூர்வ மறுப்புக் கடிதத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.
- Banque de France இல் விண்ணப்பித்தல்: அந்த மறுப்புக் கடிதம், உங்கள் அடையாளச் சான்று (Passport / Titre de séjour) மற்றும் முகவரிச் சான்றுடன் (Justificatif de domicile) Banque de France கிளைக்கோ அல்லது ஆன்லைனிலோ விண்ணப்பிக்க வேண்டும்.
- வங்கி ஒதுக்கீடு: Banque de France உங்கள் மனுவைப் பரிசீலித்து, 1 நாளுக்குள் குறிப்பிட்ட ஒரு வங்கியை (BNP Paribas, Crédit Agricole, LCL போன்றவை) சுட்டிக்காட்டி, உங்களுக்குக் கணக்குத் தொடங்குமாறு அந்த வங்கிக்குக் கட்டளையிடும்.
- அடிப்படைச் சேவைகள் (Services Bancaires de Base): இந்தச் சட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் வங்கியில் உங்களுக்குக் கணக்குப் பராமரிப்பு, RIB, வாங்கி அட்டை (Carte Bancaire) மற்றும் பணம் செலுத்தும் வசதிகள் முற்றிலும் இலவசமாக அல்லது அடிப்படைச் சேவைகளாக வழங்கப்படும்.
பிரான்சில் வங்கிக் கணக்கு மறுக்கப்படும் போது பதற்றமடையாமல் இந்தச் சட்டபூர்வ உரிமையைப் பயன்படுத்தி உங்களது உரிமையை நிலைநாட்ட முடியும்.
அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:
- Banque de France (Droit au Compte விண்ணப்பப் பக்கம்): banque-france.fr – Droit au compte
- Service-Public (வங்கிக் கணக்கு உரிமை வழிகாட்டி): service-public.fr – Droit au compte
