பிரான்சில் வேலைவாய்ப்பு மையத்தில் (France Travail – பழைய Pôle Emploi) பதிவு செய்துள்ள நபர்கள் அல்லது வேலையில்லா உதவித் தொகை (ARE) பெறுபவர்கள் புதிய தொழில் தொடங்கும் போது, அவர்களுக்குப் பிரெஞ்சு அரசாங்கம் நிதி மற்றும் வரிச் சலுகைகளை வழங்கி ஊக்குவிக்கிறது. அவற்றில் மிக முக்கியமான இரண்டு திட்டங்கள் ACRE மற்றும் ARCE ஆகும்.
- ACRE (Aide à la Création ou à la Reprise d’une Entreprise)
ACRE என்பது புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பு வரிச் சலுகை (Exonération) ஆகும்.
- சலுகை விபரம்: தொழில் தொடங்கிய முதல் ஆண்டில், நீங்கள் ஈட்டும் வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய URSSAF சமூகக் கட்டணங்களில் (Cotisations Sociales) 50% வரை விலக்கு அல்லது தள்ளுபடி பெற முடியும்.
- யாரெல்லாம் தகுதியானவர்கள்: France Travail இல் பதிவு செய்த வேலையற்றோர், 18 முதல் 25 வயதிற்குட்பட இளைஞர்கள், RSA அல்லது ASS உதவித் தொகை பெறுபவர்கள் மற்றும் முன்னுரிமைப் பகுதிகளில் (QPV) தொழில் தொடங்குபவர்கள்.
- விண்ணப்பிக்கும் முறை: தொழில் தொடங்கிய 60 நாட்களுக்குள் URSSAF அமைப்பிற்கு ACRE விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
- ARCE (Aide à la Reprise ou à la Création d’Entreprise)
ARCE என்பது France Travail மூலம் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலையில்லா உதவித் தொகையை (ARE) மாதாந்திரமாகப் பெறாமல், ஒரே முதலீட்டுத் தொகையாக (Capital) மாற்றிக் கொடுக்கும் திட்டமாகும்.
- நிதியுதவித் தொகை: உங்களுக்கு மீதமுள்ள மொத்த ARE உதவித் தொகையில் 60% தொகை ஒரே மூலதன நிதியாக உங்களது தொழில் தேவைக்காகக் கிடைக்கும்.
- வழங்கப்படும் முறை:
- முதல் 50% பங்கு: தொழில் தொடங்கியவுடன் (France Travail ஒப்புதலுக்குப் பின் வழங்கப்படும்)
- மீதி 50% பங்கு: தொழில் தொடர்ந்து இயங்குவதை உறுதிப்படுத்தி 6 மாதங்களுக்குப் பிறகு வழங்கப்படும்.
- தகுதி நிபந்தனை: நீங்கள் ARE உதவித் தொகை பெறத் தகுதியுடையவராக இருக்க வேண்டும் மற்றும் ACRE சலுகைக்கான ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு: ARCE திட்டத்தைத் தெரிவு செய்தால்,மாதாந்திர ARE உதவித் தொகை நிறுத்தப்படும்.அதற்குப் பதிலாக தொழில் தொடங்குவதற்கான உடனடி மூலதன நிதி (Capital) கிடைக்கும்.
அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்;
- France Travail (ARCE வழிகாட்டி): francetravail.fr – ARCE
- URSSAF (ACRE சலுகை விண்ணப்பம்): urssaf.fr – ACRE
- Service-Public (தொழில் தொடங்குவோருக்கான நிதி உதவிகள்): service-public.fr – ACRE et ARCE
