பிரான்சில் உணவகம்/வேலையிடத்தில் காயம் அடைதல்: பணி விபத்துக் காப்பீடு, உரிமைகள்  

Must Read

பிரான்சில் உணவகங்கள், கட்டுமானத் துறைகள் அல்லது பிற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை நேரத்தில் காயமடைந்தால், அவர்களைப் பாதுகாக்கப் பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்தில் Accident du Travail என்ற சிறப்புப் பணி விபத்து காப்பீட்டு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.இந்தச் சட்டபூர்வ பாதுகாப்பைப் பெற ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை இங்கு பார்ப்போம். 

  1. 24 முதல் 48 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டிய கடமைகள் 

வேலையிடத்திலோ அல்லது பணி நிமித்தமாகப் பயணிக்கும் போதோ (Trajet) விபத்து ஏற்பட்டால்உடனடியாகப் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

  • முதலாளிக்கு அறிவித்தல்: விபத்து நடந்த 24 மணிநேரத்திற்குள் உங்கள் முதலாளிக்கு (Employeur)தகவல் தெரிவிக்க வேண்டும். 
  • மருத்துவச் சான்றிதழ் (Certificat Médical Initial): உடனடியாக மருத்துவரிடம் சென்று விபத்தினால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புக்களைப் பதிவு செய்து Certificat Médical Initial பெற வேண்டும். 
  • Declaration சலுகை: முதலாளி விபத்து நடந்த 48 மணிநேரத்திற்குள் அதனைச் சமூகப் பாதுகாப்பு அமைப்பான CPAM (Ameli) இற்கு அறிவிக்க (Déclaration d’accident du travail) வேண்டும்.  
  1. CPAM மூலம் பெறக்கூடிய மருத்துவ நிவாரணம் (100% Coverage)

பணி விபத்தாக CPAM அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், ஊழியருக்குப் பின்வரும் மருத்துவச் சலுகைகள் கிடைக்கும்.

  • முழுமையான இலவச சிகிச்சை: விபத்துத் தொடர்பான அனைத்து மருத்துவச் செலவுகள், அறுவை சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சைச் செலவுகள் 100% முழுமையாக இலவசமாக (Tiers Payant) வழங்கப்படும்.
  • முன்பணம் தேவையில்லை: மருத்துவர்கள் அல்லது மருந்தகங்களில் ஊழியர்கள் தங்கள் கையிலிருந்து முன்பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. 
  1. ஊதியப் பாதுகாப்பு (IJSS & Maintien de Salaire)

விபத்து காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால்:

  • CPAM நாளிழப்பீட்டுத் தொகை (IJSS): CPAM அமைப்பு தினசரி இழப்பீட்டுத் தொகையை (Indemnités Journalières) வழங்கத் தொடங்கும்.
  • சம்பளப் பாதுகாப்பு: நிறுவனத்தின் ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டு, முதலாளியும் குறிப்பிட்ட தொகையைச் சேர்த்து வழங்கி ஊழியரின் ஊதிய இழப்பைக் குறைப்பார்.
  • பணி நீக்கத் தடை: பணி விபத்துக் காரணமாக விடுப்பில் இருக்கும் காலத்தில் ஊழியரைப் பணிநீக்கம் செய்யப் பிரெஞ்சுச் சட்டத்தில் கடுமையான தடை விதிக்கப்படுள்ளது. 

வேலையிடத்தில் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதுடன், விபத்து நேர்ந்தால் சட்டபூர்வக் காலக்கெடுவிற்குள் அறிவிப்பது உங்கள் உரிமைகளை முழுமையாகப் பெற உதவும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

Latest News

10 Best Amazon Products for Kids, Students & Parents in 2026 – Honest Review

Here are 10 highly useful and practical products I personally recommend for families. Each one is chosen based on...

Sri Lanka’s 97.4% Literacy Rate: A Reflection of Deep-Rooted Individualism, Not Systemic Success

Colombo, April 2026 – Sri Lanka has achieved a remarkable literacy rate of 97.4% in 2024, according to the...

Spa Ceylon’s Best Floral Perfumes: Honest Reviews & Ratings

Spa Ceylon, a renowned Sri Lankan wellness brand, crafts exquisite floral perfumes inspired by the island’s lush royal gardens...

The “Bankruptcy” Analogy: The 11:59 protocol Review

You Are Treating Time Like a Credit Card. The Bill is Due. Most people live their lives in "debt." I don't...

The Ultimate Guide to Productivity for the “Broken” Brain: Ranking the Top Books for the Crisis-Driven Mind

If you have ever felt "broken" by standard productivity advice, you are likely reading the wrong manual. Most habit-building...

PCOS and Weight Loss: Proven Strategies for Sustainable Success

Polycystic Ovary Syndrome (PCOS) affects up to 10% of women of reproductive age, causing hormonal imbalances that lead to...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More Articles Like This