பிரான்சின் இல்-டி-பிரான்ஸ் (Île-de-France) பிராந்தியத்தில் பாடசாலைகளில் படிக்கும் சிறுவர்கள் மற்றும் பல்கலைக்கழக உயர்கல்வி மாணவர்களுக்குப் பொதுப் போக்குவரத்துச் செலவைக் கணிசமாகக் குறைக்க Navigo Imagine R என்ற சிறப்பு வருடாந்திர பயண அட்டை வழங்கப்படுகிறது.
- Imagine R அட்டை யாருக்கெல்லாம் கிடைக்கும்? (தகுதிகள்)
- வயது வரம்பு:விண்ணப்பிக்கும் ஆண்டின் செப்டெம்பர் 1 ஆம் திகதி நிலவரப்படி 26 வயதிற்குட்பட்ட மாணவராக இருக்க வேண்டும்.
- கல்வித் தகுதி: பிரான்சில் உள்ள பாடசாலைகள் (Collège, Lycée) அல்லது அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் (Université / Grande École) கல்வி பயில்பவராக இருக்க வேண்டும்.
- கட்டணச் சலுகைகள் மற்றும் பயன்கள்
சாதாரண Navigo Pass அட்டைக்கு மாதத்திற்கு சுமார் €86 வரை செலவாகும் நிலையில்,Imagine R அட்டை மூலம் மாணவர்களுக்குப் பாதிக்கும் மேலான சலுகை கிடைக்கிறது:
- வருடாந்திரக் கட்டணம்: மாணவர்கள் முழு ஆண்டிற்கும் (13 மாதங்கள் முதன்முறை விண்ணப்பிப்பதற்கு) சுமார் €380 மட்டுமே செலுத்த வேண்டி வரும்.
- அனைத்து மண்டலங்களிலும் பயணம் (All zones 1-5): வார நாட்கள், வார இறுதி நாட்கள் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களிலும் பாரிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து மண்டலங்களிலும் (Metros, RER, Buses, Trams, Transilien) தடையின்றிப் பயணிக்கலாம்.
- நகர சபை (Mairie) மற்றும் துறைப் பகுதிகள் வழங்கும் கூடுதல் மானியங்கள்
மாநில அரசுக் குறைப்பைத் தவிர, பல Mairies (நகர சபைகள்) மற்றும் Conseil Départemental அமைப்புகள் தங்கள் பகுதியில் வாழும் மாணவர்களுக்குக் கூடுதல் நிதி உதவி வழங்கி அட்டைக் கட்டணத்தைக் குறைக்கின்றன:
- உதாரணத்திற்கு, பாரிஸ் நகர சபை (Ville de Paris) 18 வயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கு imagine R கட்டணத்தை 100% முழுமையாகத் திரும்பத் தருகிறது (Gratuité).
- பிற திணைக்களங்களும் (Val-de-Marne, Seine-Saint-Denis போன்றவை) குடும்ப வருமானத்தின் அடிப்படையில் €100 முதல் €200 வரை மானியம் (Subvention) வழங்குகின்றன.
- விண்ணப்பிப்பது எப்படி?
iledefrance-mobilites.fr இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது மாணவர் சான்றிதழ் (Scolarité Certificate / Carte Étudiant), புகைப்படம், மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான வாங்கி விபரங்களை (RIB) பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதிகாரபூர்வ அரச இணையத்தள இணைப்புகள்:
- Île-de-France Mobilitiés (Imagine R விண்ணப்பம்): iledefrance-mobilites.fr – Imagine R
- Service-Public (மாணவர் போக்குவரத்து வழிகாட்டி): service-public.fr – Transports étudiants
