பிரான்சில் உணவகம் (Restaurant), பாஸ்ட்ஃபுட் கடை அல்லது டேக்-எவே (Takeaway) போன்ற உணவுத் தொழிலை தொடங்கத் திட்டமிடுபவரா நீங்கள்? உணவுப் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் நலனைப் பேணுவதற்காகப் பிரெஞ்சு அரசு கடுமையான சட்ட நடைமுறைகளைக் கொண்டுள்ளது. இதில் மிகவும் அவசியமான விதிமுறையான HACCP (Hazard Analysis Critical Control Point) சுகாதாரச் சான்றிதழ் மற்றும் ஆய்வுகள் குறித்து கீழே விரிவாக விபரிக்கப்படுள்ளது.
- HACCP பயிற்சி மற்றும் சான்றிதழ் ஏன் கட்டாயம்?
பிரான்சில் உணவுத் துறையில் வணிகம் நடத்தும் எவருக்கும் HACCP விதிமுறைகளின் கீழ் உணவுப் பாதுகாப்புப் பயற்சி பெறுவது சட்டபூர்வமாகக் கட்டாயமாகும்:
- பயிற்சி விபரங்கள்: உணவு தயாரிப்பு, சேமிப்பு, குளிரூட்டும் முறைகள் (La chaîne du froid) மற்றும் குறுக்கு மாசுபடுதல் (Contamination croisée) போன்றவற்றைத் தடுத்தல் குறித்து 14 மணிநேரப் பயிற்சி வழங்கப்படுகிறது.
- அவசியம்: வணிகத்தில் பணிபுரியும் குறைந்தபட்சம் ஒரு ஊழியராவது (உரிமையாளர் உட்பட) இந்த அதிகாரபூர்வ HACCP சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
- DDPP ஆய்வுகள் (Inspection Sanitaire) மற்றும் கட்டுப்பாடுகள்
உணவகங்களின் சுகாதார தரத்தை உறுதிப்படுத்த பிரெஞ்சு அரசின் கீழ் இயங்கும் DDPP (Direction Départementale de la Protection des Populations) துறை அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
- சுகாதார மதிப்பீடு: சமையலறைச் சுத்திகரிப்பு, உணவுப் பொருட்களின் காலாவதித் திகதிகள், மற்றும் வெப்பநிலைப் பதிவுகள் (Relevés de température) ஆகியவை முறையாகப் பராமரிக்கப்படுகிறதா எனச் சோதிக்கப்படும்.
- Alim’confiance தரம்: ஆய்வுகளின் முடிவுகள் பொதுவெளியில் வெளிப்படையாக வெளியிடப்படும். கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால்,கடைக்கு உடனடித் தடை விதிக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
- பின்பற்ற வேண்டிய முக்கிய சுகாதார நடைமுறைகள்
- Traceability (உணவுமூலத் தூய்மை): பயன்படுத்தப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் எங்கு வாங்கப்பட்டன என்பதற்கான ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் குறைந்தது சில மாதங்களுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும்.
- Hygiène du personnel: பணியாளர்கள் முறையான சீருடை, தலைக்கவசம் (Charlotte) மற்றும் கையுறைகளைப் பயன்படுத்துவதுடன், தனிநபர் சுகாதாரத்தை மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.
சரியான HACCP பயிற்சியைப் பெற்று, சுகாதார விதிகளுக்கு உட்பட்டு உணவகங்களை நடத்துவதன் மூலம் சட்டபூர்வச் சிக்கல்களைத் தவிர்த்து வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற முடியும்.
அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:
- Ministère de l’Agriculture (உணவுப் பாதுகாப்பு மற்றும் HACCP வழிகாட்டி): agriculture.gouv.fr – Hygiene des aliments
- Service-Public (உணவுத் துறை வணிகப் பதிவு விதிகள்): service-public.fr – Restauration commerciale
