இலங்கை, இந்தியா போன்ற ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து (Non-UE) பிரான்சுக்கு வந்து வாழும் வெளிநாட்டவர்கள், தங்களது தாய்நாட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி பிரான்சில் தொடர்ந்து வாகனங்களை இயக்க முடியாது. ஒரு குறிப்பிட காலக்கெடுவுக்குள் அதை பிரெஞ்சு ஓட்டுநர் உரிமமாக (Échange de permis de conduire)மாற்றிக் கொள்வது சட்டபூர்வ கட்டாயமாகும்.
- மிக முக்கியமான 1 வருட காலக்கெடு விதி (Délai d’un an)
பிரான்சில் முதன்முறையாகச் சட்டபூர்வக் குடியிருப்புச் சான்று (Carte de Séjour / VLS-TS) பெறுபவர்கள், முதல் கார்டு கிடைத்த அல்லது விசா உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 1 வருடத்திற்குள் ஓட்டுநர் உரிம மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- 1 வருடக் கெடு முடிந்தால்: இந்த 1 வருடக் காலக்கெடு முடிந்த பிறகு விண்ணப்பித்தால், உங்கள் மனு நிராகரிக்கப்படும். அதன்பின் பிரான்சில் புதிதாகப் பாடம் படித்து, பிரெஞ்சு ஓட்டுநர் தேர்வை (Examen du permis) எழுத்தித்தான் உரிமம் பெற முடியும்.
- மாணவர்களுக்கான விலக்கு (Étudiants): மாணவர் விசாவில் (Titre de Séjour Étudiant) இருப்பவர்கள் தங்களின் படிப்பு முடியும் வரை தாய்நாட்டு ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தலாம்; அவர்கள் உடனடியாக மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.
- தேவையான தகுதிகள் மற்றும் ஆவணங்கள் (Checklist)
உங்கள் தாய்நாட்டு ஓட்டுநர் உரிமம் பிரான்சுடன் பரஸ்பர ஒப்பந்தம் (Accord de réciprocité) கொண்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின், பின்வரும் ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும்.
- செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்: தாய்நாட்டு உரிமத்தின் அசல் மற்றும் வண்ண போட்டோகொப்பி.
- அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பு (Traduction assermentée): அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளரால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சான்று.
- Attestation de droits à conduire (Unrestricted Driving License Certificate): தாய்நாட்டுப் போக்குவரத்துத் துறையிடமிருந்து (RDA / RTO) ஓடினர் உரிமம் செல்லுபடியாவது மற்றும் தடையில்லை எனப் பெறப்பட்ட சான்றிதழ் (6 மாதங்களுக்குள் பெறப்பட்டது).
- குடியிருப்புச் சான்றுகள்: Carte de Séjour, முகவரிச் சான்று (Justificatif de domicile – 6 மாதங்களுக்குள்) மற்றும் e-Photo.
- ANTS தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை
முன்பு போல பிரிஃபெக்சர்களுக்கு நேரடியாகச் செல்லத் தேவையில்லை. அனைத்து நடைமுறைகளும் ANTS தளத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன:
- permisdeconduire.ants.gouv.fr இணையத்தளத்தில் கணக்குத் தொடங்கவும்.
- “Demander l’échange de mon permis de conduire” என்ற பகுதியைத் தேர்வு செய்து ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், தற்காலிகமாக வாகனம் ஓட்டுவதற்கான Attestation de Dépôt Sécurisé (ADS) வழங்கப்படும்.
- பின்னர் உங்கள் அசல் உரிமத்தை அஞ்சல் மூலம் அனுப்பக் கோருவார்கள். அசல் பெறப்பட்ட சில வாரங்களில் புதிய பிரெஞ்சு ஓட்டுநர் உரிமம் உங்களது முகவரிக்கு அஞ்சலில் வந்து சேரும்.
(குறிப்பு:அரசு விதிகளின் படி விண்ணப்பக் கட்டணமாகத் தபால் தலை / வரி முத்திரை [Timbre Fiscal] செலுத்துகை நடைமுறைகளும் இதில் அடங்கும்.)
அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:
- ANTS (ஓட்டுநர் உரிம மாற்ற விண்ணப்பத்தளம்): permisdeconduire.ants.gouv.fr
- Service-Public (Permis de conduire வழிகாட்டி): service-public.fr – Échange permis étranger
