பிரான்சில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கான கல்வியும் அவர்களின் நலனும் மிக முக்கியமான ஒன்றாகும். பிரெஞ்சு அரசாங்கம் 3 வயது முதல் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தி உள்ளதுடன், கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பெற்றோர்களின் நிதிச் சுமையைக் குறைக்கச் சிறப்பு உதவிகளையும் வழங்குகிறது.
- 3 வயது முதல் கட்டாயக் கல்வி (Instruction Obligatoire)
பிரெஞ்சு கல்விச் சட்டத்தின்படி:
- கட்டாயக் கல்வி: பிரான்சில் வசிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 3 வயது 16 வயது வரை கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது (Scolarisation obligatoire).
- குடிவரவு அந்தஸ்துத் தேவையில்லை: பெற்றோரின் விசா அல்லது குடியிருப்புச் சான்று (Carte de Séjour) எதுவாக இருந்தாலும், பிரான்சில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பாடசாலையில் சேர்ந்து படிக்கும் முழு உரிமையுண்டு.
- பாடசாலையில் பதிவு செய்யும் முறை (Inscription à la Mairie)
குழந்தைகளை முதன்முறையாகப் பாடசாலையில் (Ecole maternelle Élémentaire) சேர்ப்பதற்குப் பின்வரும் படிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- Mairie பதிவு: உங்கள் பகுதிக்கான நகரசபைக்கு (Mairie) சென்று குழந்தையைப் பதிவு செய்ய வேண்டும்.
- தேவையான ஆவணங்கள்: பெற்றோர் மற்றும் குழந்தையின் அடையாளச் சான்றுகள் (Passport / Acte de naissance), முகவரிச் சான்று (Justificatif de domicile – 3 மாதங்களுக்குள்) மற்றும் தடுப்பூசி அட்டவணைப் பதிவு (Carnet de santé – Vaccins).
- Certificat d’inscription: Mairie வழங்கும் பதிவுச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு, ஒதுக்கீசெய்யப்பட்ட பாடசாலைக்குச் சென்று அதிபரிடம் (Directeur / trice) சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும்.
- CAF வழங்கும் ARS கல்வி உதவித் தொகை (Allocation de Rentrée Scolaire)
ஒவ்வொரு கல்வி ஆண்டும் தொடங்கும் போது (ஆகஸ்ட் மாத இறுதியில்), பாடசாலைச் செலவுகளுக்காக CAF அமைப்பு மூலம் ARS உதவித் தொகை வழங்கப்படுகிறது.
- தகுதிகள்: 6 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள, குறிப்பிட்ட வருமான வரம்பிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு இந்நிதி கிடைக்கும்.
- உதவித் தொகை அளவு: குழந்தையின் வயத்தைப் பொறுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் €415 முதல் €450 வரை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
- பெறும் முறை: CAF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது தானாகவே கணக்கிடப்பட்டு வழங்கப்படும். 16 முதல் 18 வயதுடைய பிள்ளைகளுக்கு அவர்கள் தொடர்ந்து கல்வி கற்பதை ஆன்லைனில் (Déclaration de scolarité) உறுதிப்படுத்த வேண்டும்.
அரசு வழங்கும் இந்த வசதிகளைச் சரியாகப் பயன்படுத்திப் பிள்ளைகளின் கல்விப் பயணத்தை சிறப்பாகத் திட்டமிடலாம்.
அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:
- Service-Public (பாடசாலைப் பதிவு வழிகாட்டி): service-public.fr – Inscription scolaire
- CAF (ARS உதவித் தொகை விபரங்கள்): caf.fr – Allocation de rentrée scolaire
- Ministère de l’Éducation Nationale (கல்வி அமைச்சு): education.gouv.fr
