பிரித்தானியா வெப்ப அலை பாதிப்பு! வரும் அடுத்த கட்டம்!

Must Read

பிரித்தானியாவில் 2026 மே,ஜூன் மாதங்களில் பதிவான சாதனை வெப்ப அலை காரணமாக,இதுவரை ஆயிர கணக்கான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் 2700+ உயிரிழப்புக்கள் ஏற்றப்பட்டதாகவும் இங்கிலாந்தின் வரலாற்றில் அதிக வெப்பம் ஜூன் மாதத்தில் பதிவானதாகவும் கூறப்படுகின்றது. அந்த குறிப்பிட்ட வெப்ப அதிகரிப்பே 42% இறப்புக்களுக்கு காரணம் என சொல்லப்படுகின்றது.

தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஆறுகள் சுருங்கி,பசுமை நிலங்கள் காய்ந்து போயுள்ளன. விவசாயம்,நீர் வழங்கல் பாதிப்படைந்துள்ளன.பொருளாதார இழப்பு பில்லியன் பவுண்டுகளை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அடுத்த கட்ட வெப்ப அலைக்கு உரிய எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்த வெப்ப அலை காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது. மெட் அலுவலகம் மற்றும் சுகாதார நிபுணர்கள், காலநிலை மாற்றம் இல்லையெனில் இத்தகைய தீவிர வெப்பம் ஏற்பட வாய்ப்பில்லை என எச்சரித்துள்ளனர். காட்டுத்தீ, வறட்சி அறிவிப்புகள், ஹோஸ் பைப் தடைகள் ஆகியவை பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளன.

விவசாயிகள் பயிர் இழப்புகளால் தவித்து வருகின்றனர். நதிகளில் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து, மீன் இனங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அரசு நீர் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இத்தகைய வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படும் என்பதால், நீண்டகால திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

ஐரோப்பாவில் முதல் நாடாக பிரான்சில் தடை! முக்கிய காரணங்கள்!

பிரான்ஸ் நாடாளுமன்றம் 15 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கு சமூக வலைதளங்களை தடைசெய்யும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் நாடாக இந்த சட்டம் வரும் செப்ரெம்பர்...

சுவிஸ் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் சட்டம்,வாக்கெடுப்பில் தோற்க்கடிப்பு!

சுவிசின் சனதொகையை 2050 க்குள் ஒரு கோடியாக வரம்பிடும் திட்டத்தை 2026 ஜூன் வாக்கெடுப்பில் மக்கள் நிராகரித்துள்ளனர். 55% எதிர் , 45% ஆதரவு என்ற...

கனடா: புகை புடிப்பவர்களுக்கு புதிய எச்சரிக்கை!

கனடாவில் புகையிலை பயன்பாட்டைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 2026 ஆகஸ்ட் 1 முதல் புதிய கிராஃபிக் எச்சரிக்கை படங்கள் சிகரெட் பொதிகளில் கட்டாயம் இடம்பெற...

பிரான்சுக்கு மனைவி, குழந்தையை அழைப்பது எப்படி?

பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் வெளிநாட்டவர் தனது துணைவியார் (Spouse) மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட  குழந்தைகளை பிரான்சுக்கு அழைப்பதற்கான சட்டபூர்வ நடைமுறையே  Regroupement Familial ஆகும்....

பிரான்சில் விசா இல்லாதவர்கள் கார்டு பெறத் தகுதிகள்!

பிரான்சில் முறையான விசா அல்லது குடியிருப்புச் சான்று இன்றி வாழும் வெளிநாட்டவர்கள் (Sans-Papiers) சட்டப்பூர்வமாக ரெசிடென்ஸ் கார்டு (Carte de Séjour) பெறுவதற்கு Admission Exceptionnelle...

பிரான்சில் OQTF கடிதம்: சட்டபூர்வமாக முறையீடு செய்வது எப்படி? 

பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்குப் பிரிஃபெக்சர் (Préfecture)  மூலமாக வழங்கப்படும் மிக முக்கியமான நிர்வாக உத்தரவு OQTF (Obligation de Quitter le Territoire Français) ஆகும்....

More Articles Like This