பாரிஸ் வீதியில் தமிழருக்கு நேர்ந்த கதி! அழியும் பல தமிழ் குடும்பங்கள்!

Published:

பாரிஸ் புறநகர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தமிழ் குடும்பஸ்தரின் கையை புடித்து இழுத்து சட்டையை கிழித்த தமிழ் இளைஞர்,பொறுமையிழந்த நபர், அவரை தள்ளி உதைத்து விட்டு சென்றதாக சொல்லப்படுகின்றது. வீடு வாசல் இல்லாமல் வீதிக்கு வந்த குறித்த தமிழரே அங்கும் போற வருவர்களிடம் காசு கேட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடப்பெற்றுள்ளது.

லாச்சப்பல்: பிரான்ஸ் தமிழர்களில் கிட்டத்தட்ட 500 ஈழதமிழருக்கு மேல் தின குடிக்கு அடிமையாகியுள்ளதாக சில அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன…இவர்களில் வீசா குடியுரிமை கிடைத்தவர்கள்,குடும்பங்கள் உள்ளவர்களில் இருந்து சில மாதங்கள் முன்னர் வந்து இறங்கியவர்கள் வரை இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இவர்கள் விடிந்தது முதல் இரவு வரை குடிப்பதும் படுப்பதுமாக இருப்பதாகவும் ஆங்காங்கே கிடைக்கிற இடங்களில் தங்குவதுமாக காலத்தை கழிப்பதாகவும் தெரியவந்துள்ளது.அண்மைகாலதாக குடியால் இறக்கும் தமிழர்களின் எண்ணிக்கை புலத்திலும் ஊரிலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது..

தவிர இவர்களால் பல தமிழ் குடும்பங்கள் நிம்மதி இழந்து தினமும் பல சண்டைகள் சச்சரவுகளுடனே வாழ்க்கை நடாத்துவதாகவும் தெரியவருகிறது.

வீதியில் தெரிந்தவர்களை தொல்லை செய்து காசு வாங்குவது.. காசு கொடுக்கவில்லை இல்லை என்றால் தூசனத்தால் திட்டுவது,மண்ணள்ளி எறிவது என இவர்கள் அஜராகம் அதிகரித்துள்ளது.சிலர் இரக்கப்பட்டு வேலை கொடுத்த இடங்களில் எல்லாம் வேலையை காட்டியிருக்கிறார்கள்!

இவர்கள் மற்றவர்களுக்கும் இப்படி பழக்கி,சமூகத்தை கெடுத்து கொள்வதுடன் இவர்களை நம்பி இருக்கும் குடும்பங்களையும் சீரழித்து விடுகிறார்கள் என்பதும் கண் முன்னே பார்த்து கொண்டுள்ள நிகழ்வுகள்.ஆண்களின் மனோபாவம் பெண்களை விட பலவீனம் என்பதாலேயே அவர்கள் இலகுவில் குடிக்கு அடிமையாகிறார்கள்!

குளிருக்கு குடிக்க தொடங்கியவர்கள் கூட இன்று அடிமையானவர்கள் உள்ளனர்! மதுபானம் குடிப்பது 100% தவறு என்று சொல்லவில்லை. ஆனால் தண்ணி போல குடிப்பதும் அதற்கு அடிமையாவதும் தவறு! சில வெள்ளைகளை பாருங்கள்! நக்கி நக்கி குடிப்பார்கள்! நாள் முழுக்க நல்லா வேலையும் செய்வார்கள்! ஏன் எங்கட ஆட்களிலும் இப்படி பலர் 70-80 வயதுகளில் தண்ணி அடிச்சு கொண்டு நல்ல ஆரோக்கியமாக இருக்கிறவர்கள் உண்டு!

Related articles

spot_img

Recent articles

spot_img