பிரான்சில் முறையான விசா அல்லது குடியிருப்புச் சான்று இன்றி வாழும் வெளிநாட்டவர்கள் (Sans-Papiers) சட்டப்பூர்வமாக ரெசிடென்ஸ் கார்டு (Carte de Séjour) பெறுவதற்கு Admission Exceptionnelle au Séjour (AES) ஒரு முக்கியமான வாய்ப்பாகும். இது பிரெஞ்சு குடிவரவுச் சட்டத்தின் (CESEDA) கீழ் சில குறிப்பிடட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.
- வேலைவாய்ப்பு (AES Travail) அடிப்படை
வேலை செய்பவர்கள் கார்டு விண்ணப்பம் செய்யப் பின்வரும் நிபந்தனைகள் அவசியமாகும்:
- பிரான்சில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தங்கியிருக்க வேண்டும்.
- கடந்த 24 மாதங்களில் 8 மாதங்கள் அல்லது கடந்த 5 ஆண்டுகளில் 24 மாதங்கள் வேலை செய்ததற்கானஊதியச் சீட்டுக்கள் (Fiches de paie) இருக்க வேண்டும்.
- முதலாளியின் பணிப் படிவம் (Cerfa Form – Engagement de l’employeur) மற்றும் வேலை ஒப்பந்தம் அவசியம்.
(குறிப்பு: தட்டுப்பாடு உள்ள வேலைத் துறைகளுக்கான – Métiers en tension – புதிய சட்ட நிபந்தனைகளையும் சரிபார்க்க வேண்டும்.)
2. குடும்ப வாழ்க்கை (Vie Privée et Familiale)அடிப்படை
- பிரான்சில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தங்கியிருந்து, தங்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையின் முக்கிய மையம் பிரான்ஸ்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
- பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் நபருடன் திருமணம் அல்லது Pacte civil de solidarité (PACS) மூலம் பிணைப்பில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3.குழந்தைகள் பாடசாலை (Scolarisation) அடிப்படை
- குழந்தைகள் பிரான்சில் உள்ள பாடசாலையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொடர்ந்து கல்வி கற்று வர வேண்டும்.
- பெற்றோர் பிரான்சில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தங்கியிருந்ததற்கான சான்றுகள் (Preuves de présence) வைத்திருக்க வேண்டும்.
அனைத்து விண்ணப்பங்களுக்கும் பிரெஞ்சு மொழியறிவு மற்றும் பிரெஞ்சு குடியரசின் மதிப்புகளை ஏற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புக்கள்:
- Service-Public (AES – Admission Exceptionnelle au Séjour): service-public.fr – Regularisation AES
- Légifrance (CESEDA – குடிவரவுச் சட்டக் குறியீடு): legifrance.gouv.fr – CESEDA
- Interior Ministry (குடிவரவு மற்றும் நுழைவுத் துறை): immigration.interieur.gouv.fr
