பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்குப் பிரிஃபெக்சர் (Préfecture) மூலமாக வழங்கப்படும் மிக முக்கியமான நிர்வாக உத்தரவு OQTF (Obligation de Quitter le Territoire Français) ஆகும். அகதி அந்தஸ்து அல்லது கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது இது அனுப்பப்படுகிறது.
OQTF கடிதம் வந்தால் பயப்பட வேண்டுமா?
OQTF கடிதம் கிடைத்தவுடனே நாடு கடத்தப்பட்டு விடுவோம் என்று அச்சப்படத் தேவையில்லை. இது ஒரு நிர்வாக அறிவிப்பே தவிர உடனடி நாடு கடத்தல் அல்ல. சட்டபூர்வமான காலக்கெடுவுக்குள் முறையீடு செய்தால், நீதிமன்ற முடிவு வரும் வரை பிரான்சை விட்டு வெளியேறத் தேவையில்லை (Effet suspensif).
மேன்முறையீடு செய்யும் சட்டபூர்வ வழிமுறைகள்
OQTF – ஐ எதிர்த்து Tribunal Administratif (நிர்வாக நீதிமன்றம்) மூலம் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும்.
- காலக்கெடு (Strict Deadlines): OQTF கடிதம் கிடைத்து 30 நாட்களுக்குள் (சில சந்தர்ப்பங்களில் 15 நாட்கள் அல்லது 48 மணி நேரத்திற்குள் ) நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய வேண்டும்.
- இடைக்காலத் தடை: சரியான நேரத்தில் மனுத்தாக்கல் செய்வதன் மூலம், நாடு கடத்தும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
- வழக்கறிஞர் (Avocat) மற்றும் நிதியுதவி: வழக்கை வெற்றிகரமாக நடத்தக் குடிவரவுச் சட்டத்தில் அனுபவமுள்ள வழக்கறிஞரின் (Avocat en droit des étrangers) உதவி அவசியம். வருமானம் குறைவாக இருப்பவர்கள் அரசு வழங்கும் Aide Juridictionnelle மூலம் இலவச வழக்கறிஞர் சேவையைப் பெறலாம்.
குடும்பப் பிணைப்பு (Vie privée et familiale), பணி அனுபவம் அல்லது பிரான்சில் தங்கியிருக்கும் காலம் போன்ற ஆதாரங்களை முன்வைத்து நீதிமன்றத்தில் நியாயம் பெற முடியும்.
அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புக்கள்:
- Service-Public (OQTF சட்டங்கள் & மேன்முறையீட்டு விபரங்கள்): service-public.fr – OQTF Guide
- Justice.fr (நிர்வாக நீதிமன்றங்கள் தகவல்கள்): justice.fr – Tribunal Administratif
- Aide Juridictionnelle (இலவச சட்ட உதவி விண்ணப்பம்): service-public.fr – Aide Juridictionnelle

