பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான குடிவரவுச் சட்டத்தில் (Loi Immigration) செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்களின்படி, ரெசிடென்ஸ் கார்டுகள் மற்றும் குடியுரிமை பெறுவதற்கான பிரெஞ்சு மொழித் தகுதிகள் (Language Requirements) கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
- புதிய மொழித் தகுதிகள் (Language Levels)
முதல்முறையாகக் கார்டு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் குடியுரிமை கோருபவர்களுக்கு பின்வரும் பிரெஞ்சு மொழி நிலைகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.
- பல வருட கார்டு (Carte de séjour pluriannuelle – 2 முதல் 4 ஆண்டுகள்): A2 நிலைச் சான்றிதழ் அவசியம்.
- 10 வருட கார்டு (Carte de résident): B1 நிலை சான்றிதழ் பெற வேண்டும்.
- பிரெஞ்சு குடியுரிமை (Nationalité Française): எழுத்து மற்றும் வாய்மொழி இரண்டிலும் B2 நிலை கட்டயமாக்கப்பட்டுள்ளது.
(குறிப்பு: TCF IRN, TEF IRN அல்லது DELF போன்ற அங்கீகரிக்கப்பட அதிகார்பூர்வத் தேர்வுகளின் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்).
- CIR (Contrat d’Intégration Républicaine) ஒப்பந்தம்
முதன்முதலில் கார்டு பெறும் வெளிநாட்டவர்கள் OFII (Office Français de l’Immigration et de l’Intégration) மூலம் CIR ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்:
- குடிமைப் பயிற்சி (Formation Civique): பிரெஞ்சு குடியரசின் கொள்கைகள், நிறுவனங்கள் மற்றும் கலாச்சாரம் குறித்த 24 மணிநேரக் கட்டாய பயிற்சி.
- மொழிப் பயிற்சி: OFII நடத்தும் ஆரம்ப மொழித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இலவச பிரெஞ்சு மொழிப் பயிற்சிகள் வழங்கப்படும்.
கார்டுகளைப் புதுப்பிப்பதற்கும், 10 வருட கார்டுக்கும் CIR பயிற்சிகளை முழுமையாக முடித்ததற்கான சான்றிதழ் (Attestation) சமர்ப்பிப்பது அவசியமாகும்.
அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:
- Service-Public (பிரெஞ்சு மொழித் தகுதிகள் வழிகாட்டி ): service-public.fr – Maitrise de la langue française
- OFII (CIR ஒப்பந்தம் & மொழிப் பயிற்சிகள்): etrangers-en-france.interieur.gouv.fr – CIR Guide
- France-Visas / Immigration (பிரெஞ்சு குடிவரவுத் துறை): immigration.interieur.gouv.fr
