ஊரில பிறந்த நாள் ஒன்றுக்கு போனா,இரவு 9 மணியாச்சு, கேக் வெட்டினா பாடு இல்லை… இது என்னடா என்று சாப்பிட போன இடத்தில் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலனு பாத்தா, பிறந்த நாள் பிள்ளை, படலை படலையை பாத்துட்டு இருக்குது…வந்தவங்களுக்கும் ஒரு மாதிரிதான் போச்சு.. அங்க இங்கனு பாக்க வெளிகிட்டாங்க..சிலர் எழும்பி போக வெளிகிட்டாங்க.. சரி என்ன அன்ரிமார் குசு குசுக்கீனம் என்று காதை குடுத்து கேட்டா..
ஏதோ சப்ரைசு டெலிவரியாம்,அது வரனும்னு தாயும் மோளும் வெயிட் பன்றாங்களாம்,அது வந்த பிறகுதான் கேக் வெட்டி ரைஸ் போடுவாங்களாம்.. இதென்னடா என்டு இப்ப நானும் படலையை எட்டி எட்டி பாக்க ஆரம்பிச்சன்…
கொஞ்சம் நேரமெடுத்துதான் வந்து சேர்ந்தது… ஓசி எங்கட காசில பொருள வாங்கி,எங்கட காசிலயே பெற்றோர் அடிச்சு , அதில எங்கட காசிலயே கமிசனும் அடிச்சு,பெரிய லாபம் ஒன்ட பாக்கிற இந்த சப்ரைஸ் கும்பலுக்கு நேரத்துக்கு வாறது என்னா பச்சை கச்சல் போல!
சரி என்டு கேக் வெட்டி,ரைஸ்ம் சாப்பிட்டு படத்தை எடுத்து போட்டு வெளிகிடேக்க , பிறந்த நாள் பிள்ளைட்ட கேட்டன்.. அந்த சப்ரைஸ் கிப்ட் யாரு அனுப்பினா என்டு.. அதுக்கு அந்த பிள்ளை சொல்லிச்சு நான்தான் அண்ணை ஓடர் பண்ணினான்.. அம்மா காசு தந்தவா!
