பிரான்ஸ் தமிழருக்கு 30 ஆண்டுகள் சிறை! நாட்டுக்கு அனுப்ப உத்தரவு!

Published:

யாழில் சிறுமி ஒருவருக்கு திருமண ஆசை காட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

அத்துடன் தலைமறைவாகவுள்ள குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணையை மன்று பிறப்பித்துள்ளது. 
16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக வாக்குறுதி வழங்கி , பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய நபர் , சிறுமி 06மாத கர்ப்பமாக இருக்கும் போது , சிறுமியின் அறிவின்றி , சட்டவிரோத கருக்கலைப்பை மேற்கொண்ட பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். 

சம்பவம் குறித்த வரக்கு விசாரணைகள் எதிரி இன்றி,யாழ் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில்,விசாரணையின் அடிப்படையில் எதிரியை குற்றவாளியாக கண்ட நீதிமன்று 30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை விதித்துள்ளது.

தற்போது குற்றவாளி பிரான்ஸ் நாட்டில் வசிப்பதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து , குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களுக்கும் குற்றவாளி தொடர்பான தகவல்கள் அறிவிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

Related articles

spot_img

Recent articles

spot_img