பிரான்சில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் ரெசிடென்ஸ் கார்டு (Carte de séjour) புதுப்பிப்பதற்கோ அல்லது புதிய விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கோ பிரிஃபெக்சர்களில் (Préfecture) ஆன்லைனில் நேரம் (RDV) பெறுவது தற்போதைய சூழலில் பெரும் சவாலாக மாறியுள்ளது.
- ANEF டிஜிட்டல் முறைமை மற்றும் சிரமங்கள்
தற்போது பெரும்பாலான சேவைகள் பிரெஞ்சு அரசின் டிஜிட்டல் தளமான ANEF (Administration Numérique des Étrangers en France) மூலமாக மாற்றப்பட்டு வருகின்றன:
- ANEF தளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கும் வசதி இருந்தாலும், குறிப்பிட்ட பல நடைமுறைகளுக்கு இன்னும் பிரிஃபெக்சர் இணையத்தளங்களில் நேரடி RDV எடுக்க வேண்டியுள்ளது.
- “Aucun créneau disponible” (நேரம் எதுவும் இல்லை) என்ற செய்தி அடிக்கடி தோன்றுவதால், கார்டு புதிப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுப் பலரின் வேலை உரிமைகள் மற்றும் சமூக உதவிகள் பாதிக்கப்படுகின்றன.
- RDV கிடைக்காத பொது நீதிமன்ற நடவடிக்கை (Référé-Mesures Utiles)
தொடர்ந்து முயற்சித்தும் RDV பெற முடியாத நிலை நீடித்தால், நீங்கள் சட்டபூர்வமான அவசர நடவடிக்கையை எடுக்க முடியும்:
- ஆதாரங்களைச் சேகரித்தல்: ஆன்லைனில் RDV கிடைக்கவில்லை என்பதைக் காட்டும் பல தேதிகளிலான ஸ்கிரீன்ஷாட்டுகள் (Screenshots) பிரிஃபெக்சருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் பதிவு அஞ்சல்கள் (Lettre recommandée LRAR) ஆகியவற்றைச் சேமித்து வைக்க வேண்டும்.
- Référé-Measure Utiles: ஒரு குடிவரவு வழக்கறிஞர் (Avocat) மூலம் நிர்வாக நீதிமன்றத்தில் (Tribunal Administratif) Référé-Measure Utiles மனுத்தாக்கல் செய்யலாம்.
- நீதிமன்ற உத்தரவு: உங்கள் அவசர நிலை மற்றும் நிர்வாகத்தின் அலட்சியத்தை ஏற்றுக் கொண்டு, நீதிமன்றம் பிரிஃபெக்சருக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் உங்களுக்கு RDV வழங்க உத்தரவிடும்.
அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:
- ANEF அதிகாரபூர்வ விண்ணப்பத் தளம்: etrangers-en-france.interieur.gouv.fr
- Service-Public (ANEF வழிகாட்டி & தகவல்கள்): service-public.fr – ANEF
- Service-Public (Référé-Measure Utiles நீதிமன்ற நடவடிக்கை): service-public.fr – Référé Conservatoire
