பிரான்சில் அகதி அந்தஸ்து (asylum) பெறுவதற்கான சட்ட நடைமுறைகள், புதிய சீர்திருத்தங்கள் காரணமாக மிகவும் கண்டிப்பானதாக மாறியுள்ளன. விண்ணப்பங்களின் முதல் நிலையிலேயே தவறுகள் நடப்பதைத் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
- OFPRA நேர்காணல் (Interview) மற்றும் தவிர்க்க வேண்டிய தவறுகள்
OFPRA (Office Français de Protection des Réfugiés et Apatrides) நிறுவனத்தின் நேர்காணலின் போது:
- முரண்பாடான தகவல்கள்: எழுத்துபூர்வ விண்ணப்பத்தில் (Récit) குறிப்பிடட தகவல்களுக்கும், நேர்காணலின் போது கூறும் பதில்களும் இடையே முரண்பாடு இருக்கக் கூடாது.
- பொதுவான கதைகள்: இணையத்தளத்திலிருந்தோ அல்லது பிறரிடமிருந்தோ நகலெடுக்கப்படட கதைகளைத் தவிர்த்து, உங்களுக்கு நடந்த உண்மையான ஆபத்துக்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.
2. புதிய Pôles France Asile மையங்களின் வேலைமுறைகள்
பிரான்சின் பு திய சட்ட சீர்திருத்தங்களின்படி, Prefecture, OFII ஒருங்கிணைக்கப்படும் Pôles France Asile மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இதன் மூலம் புகலிட விண்ணப்பங்களை விரைவாகப் பதிவு செய்து, தகுதியற்ற விண்ணப்பங்களை ஆரம்பத்திலேயே கண்டறியும் நடைமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
3. CNDA மேன்முறையீடு (Appeal) மற்றும் சட்டபூர்வ அடுத்த கட்டங்கள்
OFPRA மூலம் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால்:
- காலக்கெடு (Deadline): முடிவறிக்கை கிடைத்த 1 மாதத்திற்குள் CNDA (Cour Nationale du Droit d’Asile) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
- சட்ட உதவி (Aide Juridictionnelle): அனுபவமிக்க வழக்கறிஞர் (Avocat) ஒருவரை நியமித்து, CNDA நீதிமன்ற விசாரணைக்கு (Audience) முறையாகத் தயாராக வேண்டும்.
CNDA நீதிமன்றமும் மனுவை நிராகரித்தால், OQTF (வெளியேற்றல் உத்தரவு) பிறப்பிக்கப்படலாம். அதன்பின் தகுதியான புதிய ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே மீளாய்வு (Réexamen) செய்யவோ அல்லது மருத்துவக் காரணங்கள் / வேலைவாய்ப்பு அடிப்படையிலான மாற்று உரிமைகளுக்குச் சட்டபூர்வமாக முயற்சிகவோ முடியும்.
அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புக்கள்:
- OFPRA (பிரெஞ்சு அகதிகள் பாதுகாப்பு அலுவலகம்): ofpra.gouv.fr
- CNDA (தேசிய அகதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றம்): cnda.fr
- பிரெஞ்சு அரசின் புகலிட சேவை வழிகாட்டி: interieur.gouv.fr – Demander l’asile

