குடும்ப வாழ்வு சொல்லும் அர்த்தம்

Must Read

சமூகம் குடும்பங்களினால் ஆனது..குடும்பங்கள் ஆண் பெண் என்ற தனி மனிதர்கள் ஒன்று சேரும் போது உருவாகின்றது.தனிமனிதர்கள் குடும்பம் என்ற அமைப்பினூடாகவே சமூகத்தை படைத்து நாடாக்கி உலக இயங்கியலை நகர்த்துகிறார்கள்..

சமூகத்தில் ஆண் பெண் இயங்கியல் எவ்வாறு இருக்க வேண்டுமெனில்,பெண் அச்சாகவும் ஆண் அதனை சுற்றும் சில்லாகவும் இருக்க வேண்டும்..இது சூரிய குடும்பம் பிரபஞ்சம் தொடக்கம் அணு வரை இப்படிதான் இருமை தன்மை இயங்கியலில் இருக்கின்றது.அடிப்படையில் மனித மூளை ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாகவே வேலை செய்யும்..பெண்களுக்கு வலது மூளை அதிகமாக வேலை செய்யும்,ஆண்களுக்கு இடது மூளை அதிகமாக வேலை செய்யும்…

மூளையின் இரு பக்கத்தின் இயல்புகளும் வேறுபடும். ஆனால் இன்றைய சமுதாய இயங்கியலை கட்டமைக்கும் கருத்துலகம் மனிதர்கள் சமம் என்ற ஒரு கருதுகோளை கொண்டுவருகின்றனர்.உண்மையில் இங்கு யாரும் சமம் இல்லை,ஆணும் பெண்ணும் அவரவர் இயல்பில் இருக்கிறார்கள்..அந்த இரு இயல்புகளும் சேர்ந்து இந்த பூமியின் அடிப்படை பலமான அலகாக குடும்பம் அடித்தளமாக கட்டமைக்கப்பட்டு அதன் சமனிலை பேணப்படுகின்றது..

ஆனால் இன்றைய சமுதாய இயங்கியலை கட்டமைப்பவர்கள்,ஆண் பெண்ணின் தனிதன்மை இயல்புகளை கருத்தில் எடுக்காது,அவர்களை கம்யூட்டர் போன்ற மூளையும் இயந்திர உடலையும் கொண்ட வெறும் கருவிகளாக நினைத்து சமுதாயத்தை தங்களுக்கு சாதகமான முறையில் Program செய்து பயன்படுத்தி கொள்கிறார்கள்…

வேறு வேறு மூளை இயல்புகளை கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி என்ற பெயரில் ஒரே பாடதிட்டங்கள்,ஒரே கல்விமுறையால் தமக்கு தேவையானதை கொடுத்து கொள்கின்றனர்.இதன் மூலம் ஆண்,பெண்ணுக்குரிய உண்மையான இயல்புகளை மழுங்கடித்து பலவீனப்படுத்தி கொள்கிறார்கள்..பலவீனப்பட்டவர்களால் ஆன சமூகம் தன்னை பலவீனப்படுத்தி கல்வி முறையிலும் அதனை கொண்டு கட்டமைக்கப்படும் social engineering பொறிக்குள் அடிமைபட்டு விடுகின்றது.

உலகை கட்டமைப்பதன் அடிப்படை அடித்தளம் குடும்பம் அமைப்பாகும்..அதனை பலமாக வைத்து கொள்வதே அடுதடுத்து உலகை கட்டமைப்பதற்கான இயங்கியல்களை உருவாக்கி கொள்ள முடியும்.. ஆனால் இங்கு குடும்ப சிதைவே உலகை கட்டமைப்பதன் முதல்படியாக இருக்கின்றது.
இதன் மூலமே தெரிந்து கொள்ளலாம் இங்கு உலகம் கட்டமைக்கப்படுவதற்காக இயக்கப்படவில்லை..அடிமைப்படுத்தி கட்டி ஆளுவதற்கே இயக்கப்படுகின்றது.அதன் முதல் பிரதான இலக்கே அடிப்படையான குடும்ப அமைப்பை சிதைப்பது..

அடிப்படை குடும்ப அமைப்பை சிதைப்பதன் மூலம் உலக இயங்கியலை இயந்திரமயமாக்கி அதனை தனிமனிதர்கள் கட்டுபடுத்துவது போன்ற ஒரு நிலையை நோக்கி உலகம் நகர்த்தப்பட்டு கொண்டு வருகின்றது.

உதாரணமாக கூட்டு குடும்பமாக தற்சார்பாக வாழ்ந்து வந்த தமிழர்கள் பின்னர் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் கல்வி திணிக்கப்பட்டு தனிதனி குடும்பமாக்கப்பட்டனர்,பின்னர் நகரமயமாக்கல் என்று இடம்பெயர்ந்தனர்.தற்போது Living togetherல் வந்து நிற்கின்றது.காரணம் மிக எளிமையானது! தனிமனிதர்களை பலவீனப்படுத்தி அவர்களுக்கு நிச்சயமில்லாத ஒரு வாழ்க்கையை வாழ திணிப்பதன் மூலம் பலவீனப்படுத்தி அடிமையாக்குவது. [ குடும்ப சிதைவுகள் பெரும்பாலும் சினிமாக்கள் மூலமாக தமிழர்களிடையே திணிக்கப்பட்டதை சரியான விழிப்புணர்வுள்ளவர்கள் கண்டறிந்து கொண்டிருப்பார்கள்]

குடும்ப இயங்கியல் எவ்வாறு இருக்க வேண்டும் ..?

சில்லு போன்று ஆணும் அதன் அச்சு போன்று பெண்ணும் இருக்க வேண்டும் சில்லுக்குரிய இயல்புகள் ஆணுக்கும் பொருத்தமானவை..அச்சுக்குரிய இயல்புகள் பெண்ணுக்கும் பொருந்தும். பெண்தான் குடும்ப இயங்கியலின் மையம்..அவளை சுற்றிதான் அந்த இயங்கியல் கட்டமைக்கப்படுகின்றது இதனால்தான் மனபலம் அவர்களில் அதிகமாக இருக்கின்றது.ஆண்களில் இயக்கத்துக்கு தேவையான உடல்பலம் அதிகமாக இருக்கின்றது.

ஆணுக்கு தேவையான மனபலம் பெண்ணிடமிருந்து கிடைத்து சமனிலையாகின்றது.குடும்பம் கூட உலகை படைத்தத்தே பெண்தான்.படைப்பியலும் பெண்ணியலும் படிக்க

சில்லுதான் சுற்ற வேண்டும்..அச்சு நிலையாக இருக்க வேண்டும்..அப்போதே வாகனம் என்ற குடும்ப இயங்கியல் பயணம் செய்யும்.சில்லு சுற்றுகின்றது நானும் சேர்ந்து சுற்றினால் இன்னும் வேகமாக போகலாம் என்று அச்சு நினைக்க கூடாது,சில்லு சுற்றுது நானும் சுற்றுவன் சமூகத்தில் எனக்கும் சம அந்தஸ்து வேணும் என்று அச்சு பெண்ணியம் பேசினால் வாகனத்துக்கு என்ன நடக்கும்? அந்த இடத்தில் நின்று சுற்றி கொண்டிருக்க வேண்டியதுதான்.

ஆண் தொழிலை செய்து குடும்பத்திற்கு தேவையான இயக்க சக்தியை பணம் பொருளாக படைக்கிறான்,அதற்கு ஆணின் உடல் மன இயல்புகள் சரியாக கைகொடுக்கின்றன.. அந்த இயக்கத்துக்குரிய திசையை இயக்குனர் / சாரதியாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் பெண் தீர்மானிக்கின்றாள்..அதற்குரிய மன இயல்புகள் பெண்ணிடம் இயற்கையாக இருக்கின்றன.இதனால் இவை இயற்கையான ஒரு வாழ்வியலும் சரியான ஒரு முறையாகும்.

ஆனால் இன்றைய கருத்துலகம் ஆண் பெண் இருவரும் சமம் என்று இருவரின் இயல்புகளையும் கெடுத்து குடும்ப அமைப்பை கெடுக்கின்றது.ஆணும் வேலைக்கு போக வேண்டும் பெண்ணும் படிக்க வேண்டும் வேலைக்கு போக வேண்டும் என்கின்றது.வேறு வேறு மூளை இயல்புகளை உடைய இருவருக்கும் ஒரே பாடதிட்டம் ஒரே வேலை என சமத்துவம் பேசுகின்றது.இருவருக்கும் அவர்களின் பெரும்பகுதியை மாதாந்தம் கொடுக்கப்படுகின்றன வெறும் பேப்பர் பணத்திற்காக மாற்றீடாக்கப்படுகின்றது.

குடும்பம் என்பது குறுகிய ஒரு இயங்கியல் அல்ல! ஆனால் இன்றைய மனிதர்களின் கல்விதிட்டம் அதனை குறைத்து மதிப்பிட வைத்துவிடுகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

கனடா : கனடாவில் தவறாகப் பயன்படுத்தப்படும் தமிழ் சிறுமிகள்! பெற்றோர் அவதானம்!

கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை! கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்துச் சிறார்களின் எதிர்காலத்தைப் பலிக்கடாவாக்கும் நிகழ்வுகளுக்கும்...

உணவு – உலக இயங்கியல்

மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்…உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ...

தமிழர் சமையல் கலை – ஒரு பார்வை

சமையல் + வாழ்வும் இன்றைய காலங்களில் சமையல் என்பது சில குறிப்பிட்ட இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம் சில நிமிடங்களில் தயாராகி விடுகின்றன.இல்லையெனில் சாப்பாட்டு கடைகளில்...

அறிவும் அழிவும்

உலகில் வாழ்வதற்கு எவருக்கும் அறிவு தேவைப்படுவதில்லை..அதாவது நீங்கள் அறிவு என நினைக்கும் எதுவுமே தேவைப்படுவதில்லை. மனிதர்கள் உட்பட ஒவ்வொரு உயிருக்குமே அதற்கு வாழ தேவையான அறிவு...

வேலையை எப்படி செய்வது?

உங்கள் வேலையை செய்யுங்கள்,செவ்வனே செய்யுங்கள்.சிறியதோ பெரியதோ சரியாக செய்யப்படும் வேலைகளே உலகில் உன்னதமானது.நீங்கள் மேசை துடைப்பவராக இருந்தாலும் சீரான கவன குவிப்பு,ஒழுக்கத்தின் மூலம் அந்த வேலையை...

ஆவதும் பெண்ணாலே அழிவதும்…

உலகம்,பல கண்டங்கள்,பல நாடுகள்,பல நகரங்கள்,பல ஊர்கள்,வீடுகள் என்று பல பரிமாணங்களாக வெளியில் தெரிந்தாலும் அதன் மூலம் அலகு ஒரு குடும்பமாகும்.குடும்பத்தின் மூலம் பெண்ணாகும்.அத்தனை ஆரம்பமும் பெண்ணில்...

More Articles Like This