விசா இல்லாவிட்டாலும் பிரான்சில் இலவச மருத்துவ உதவி (AME): படிப்படி வழிகாட்டி

Must Read

பிரான்சில் முறையான விசா அல்லது குடியிருப்புச் சான்று இல்லாதவர்கள் (Sans-papiers) மருத்துவ வசதிகளைப் பெறுவதற்காக பிரெஞ்சு அரசால் வழங்கப்படும் சிறப்பு மருத்துவ உதவித்திட்டமே Aide Médicale d’État (AME) ஆகும்.இதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகள் கீழே விபரிக்கப்பட்டுள்ளன.

  1. AME பெறத் தேவையான முதன்மைத் தகுதிகள் 
  • பிரான்சில் தங்கியிருக்கும் காலம் (Preuve de présence): விண்ணப்பிக்கும் திகதிக்கு முன் குறைந்தபட்சம் 3 மாதங்கள் தொடர்ந்து பிரான்சில் தங்கியிருப்பதற்கான சான்றுகள் இருக்க வேண்டும்.(எ.கா: பழைய மருத்துவ ஆவணங்கள், தொண்டு நிறுவனங்களின் கடிதங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் அல்லது தபால் ஆதாரங்கள்).
  • அடையாளச் சான்று (Identité): கடவுச்சீட்டு (Passport), தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ்.
  • வருமான வரம்பு (Ressources): விண்ணப்பதாரரின் வருமானம்பிரான்ஸ் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச எல்லைக்குள் இருக்க வேண்டும். (ஒரு நபருக்கு ஆண்டிற்கு சுமார் €10,182 வரை; குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இது மாறுபடும்).   
  1. AME வழங்கும் நன்மைகள் 
  • மருத்துவமனைச் செலவுகள், மருத்துவர் பரிசோதனைக் கட்டணம் மற்றும் மருந்தகங்களில் (Pharmacie) பெறப்படும் மருந்துகளுக்கு 100% இலவசப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
  • AME கார்டின் செல்லுபடிக் காலம் 1 வருடம் ஆகும். அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இதைப் புதுப்பிக்க வேண்டும். 
  1. விண்ணப்பிக்கும் முறை 

சமீபத்திய புகைப்படங்கள், வருமானச் சான்றுகள் மற்றும் முகவரிச் சான்றுடன் (Domiciliation) பூர்த்தி செய்யப்பட்ட AME விண்ணப்பப் படிவத்தை உங்கள் பகுதிக்குரிய CPAM (Caisse Primaire d’Assurance Maladie) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

பிரான்சில் கார்டு புதுப்பிக்கவும், புது விண்ணப்பத்திற்கும் ஆன்லைனில் RDV எடுக்கும் முறைகள் 

பிரான்சில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் ரெசிடென்ஸ் கார்டு (Carte de séjour) புதுப்பிப்பதற்கோ அல்லது புதிய விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கோ பிரிஃபெக்சர்களில் (Préfecture) ஆன்லைனில் நேரம் (RDV)...

பிரான்ஸில் அகதி விண்ணப்பம் நிராகரிப்பு: மாற்று வழிகள் மற்றும் உதவி அமைப்புகள் 

பிரான்சில் OFPRA மற்றும் CNDA ஆகிய இரண்டிலும் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் Déboutés de  l'asile என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு வழக்கமாக OQTF (வெளியேற்றல் உத்தரவு)...

பிரான்சில் 10 வருட கார்டு, குடியுரிமை: பிரெஞ்சு தேர்வு, புதிய சட்ட மாற்றங்கள்

பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான குடிவரவுச் சட்டத்தில் (Loi Immigration) செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்களின்படி, ரெசிடென்ஸ் கார்டுகள் மற்றும் குடியுரிமை பெறுவதற்கான பிரெஞ்சு மொழித் தகுதிகள் (Language...

ஓடிஸியிலிருந்து நம்மை அறிதல்

நேற்று கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹோமரின் ஓடிஸியை நானும் ஜீவியும் திரையரங்கில் சென்று பார்த்தோம். அதி அற்புதமான திரை அனுபவத்தையும் அதற்கீடான ஆழமான சிந்தனை அருட்டல்களையும்...

பிரான்ஸ் தமிழருக்கு 30 ஆண்டுகள் சிறை! நாட்டுக்கு அனுப்ப உத்தரவு!

யாழில் சிறுமி ஒருவருக்கு திருமண ஆசை காட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ் நீதிமன்றம்...

பிரான்சில் Dublin Transfer சிக்கல்: விரல் ரேகை விதி, சட்டபூர்வ வழிமுறைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Dublin Regulation) படி, ஒரு அகதி ஐரோப்பாவிற்குள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த அல்லது விரல் ரேகை (Eurodac...

More Articles Like This