அறிவும் அழிவும்

Must Read

உலகில் வாழ்வதற்கு எவருக்கும் அறிவு தேவைப்படுவதில்லை..அதாவது நீங்கள் அறிவு என நினைக்கும் எதுவுமே தேவைப்படுவதில்லை. மனிதர்கள் உட்பட ஒவ்வொரு உயிருக்குமே அதற்கு வாழ தேவையான அறிவு அதற்குள்ளயே இயற்கையாக இருக்கின்றது.ஆக இங்கு அறிவு ஏன் தேவைப்படுகின்றது என்று பார்த்தால்.. அறிவு இங்கு ஆள்வதற்கே தேவைப்படுகின்றது.
ஆள்வது என்றால் என்ன?

இங்கு இயற்கையின் ஒரு ஒழுங்கில் அதன் ஆட்சி நடைப்பெற்று கொண்டிருக்கின்றது.இயற்கை கச்சிதமாக எல்லாவற்றையும் இணைத்து ஒரு ஆட்சியை நடாத்தி வருகின்றது. புரிந்து கொள்ளவும் இயற்கையுடான தொடர்புகளை சரியாக பேணவும் இயற்கை எமக்கு அறிவு கொடுக்கின்றது..ஆனால் உலகம் விழிப்புணர்வற்ற அந்த அறிவை வைத்து இயற்கைக்கு மாற்றாக ஒன்றை உருவாக்க முயல்கின்றது..

மனிதர்கள் எவ்வளவு முயன்றாலும் இயற்கை கட்டமைப்புக்களை உடைக்கவோ / அதற்கு மாற்றான ஒன்றை கட்டமைக்கவோ முடியாது.இவற்றை மனித இனம் முயற்சி செய்வது உலகில் தன்னை தானே அழித்து கொள்வதில்தான் முடியுமே தவிர உலகிற்கோ இயற்கைக்கோ எதுவும் ஆக போவதில்லை.

மனித இனம் என்பது உலகில் உள்ள கோடிக்கணக்கான உயிரினங்களில் ஒன்று மட்டுமே..ஆனால் எமது ஈகோ மனநிலை ஏதோ நாம்தான் உலகிற்கு சொந்த காரர்கள் என்பது போலவும் எமக்கு எதுவும் நடந்தாலே உலகமே அழிந்துவிடும் என்றும் தாங்களாக நினைத்து கொள்கிறார்கள்… மில்லியன் வருடங்களாக இந்த உலகம் இருக்கின்றது,ஆனால் மனிதர்களின் வரலாறு இந்த உலகில் சில ஆயிரம் வருடங்கள்தான்

உலகில் வழிநடாத்துபவர்கள் காலம்காலமாக மக்களை தாம் ஆள்வதால்தான் மக்கள் வாழ்கிறார்கள் என்ற ஒரு மாயையில் அவர்களை அடைத்து கொள்கிறார்கள்.மக்களும் தம்மை வழிநடாத்தி ஆள ஆட்கள்,அமைப்புகள் அரசுகள் தேவை என்ற ஒரு மனப்போக்கிலேயே அடைந்து கிடக்கிறார்கள்..இயற்கையிடமிருந்து பிரிக்கப்பட்ட,பிரிந்த மனித இனம்,செயற்கையிடம் தஞ்சம் புகுந்திருக்கின்றது.

ஒரு பெருநில உடைமையாளர் தன்னை சுற்றியுள்ள மக்களை தனக்கு வேலை செய்ய வைத்து கொள்ளுதல்,அந்த மக்களுக்கு வாழ்வதற்கு தேவையானதை கொடுத்து கொண்டு அடிப்படை தேவைகள் பூர்த்தி,மீது மொத்தமாக நில உடைமையாளர் எடுத்து கொள்வார்..இதே போலவே சாதாரண நில உடைமையாளர் தொடக்கம் உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் வரை இது இயல்பாக இருக்கின்றது…

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

கனடா : கனடாவில் தவறாகப் பயன்படுத்தப்படும் தமிழ் சிறுமிகள்! பெற்றோர் அவதானம்!

கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை! கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்துச் சிறார்களின் எதிர்காலத்தைப் பலிக்கடாவாக்கும் நிகழ்வுகளுக்கும்...

உணவு – உலக இயங்கியல்

மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்…உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ...

தமிழர் சமையல் கலை – ஒரு பார்வை

சமையல் + வாழ்வும் இன்றைய காலங்களில் சமையல் என்பது சில குறிப்பிட்ட இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம் சில நிமிடங்களில் தயாராகி விடுகின்றன.இல்லையெனில் சாப்பாட்டு கடைகளில்...

வேலையை எப்படி செய்வது?

உங்கள் வேலையை செய்யுங்கள்,செவ்வனே செய்யுங்கள்.சிறியதோ பெரியதோ சரியாக செய்யப்படும் வேலைகளே உலகில் உன்னதமானது.நீங்கள் மேசை துடைப்பவராக இருந்தாலும் சீரான கவன குவிப்பு,ஒழுக்கத்தின் மூலம் அந்த வேலையை...

ஆவதும் பெண்ணாலே அழிவதும்…

உலகம்,பல கண்டங்கள்,பல நாடுகள்,பல நகரங்கள்,பல ஊர்கள்,வீடுகள் என்று பல பரிமாணங்களாக வெளியில் தெரிந்தாலும் அதன் மூலம் அலகு ஒரு குடும்பமாகும்.குடும்பத்தின் மூலம் பெண்ணாகும்.அத்தனை ஆரம்பமும் பெண்ணில்...

குடும்ப வாழ்வு சொல்லும் அர்த்தம்

சமூகம் குடும்பங்களினால் ஆனது..குடும்பங்கள் ஆண் பெண் என்ற தனி மனிதர்கள் ஒன்று சேரும் போது உருவாகின்றது.தனிமனிதர்கள் குடும்பம் என்ற அமைப்பினூடாகவே சமூகத்தை படைத்து நாடாக்கி உலக...

More Articles Like This