தலைவர் இருக்கிறாரா..?

Must Read

தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற வாதப்பிரதிவாதங்கள் தமிழ் ஊடகப்பரப்பில் தொடர்ந்து சூடுபிடித்துள்ள ஒரு கருத்து. ஈழத் தமிழினத்தின் அரசியல் பரப்பில் 17 வருடங்களாக உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் நடந்த மௌனயுத்தம் இன்று பெருவெடிப்பாக வெடித்திருக்கிறது. 2009ல் தலைவரின் மரணத்தை பொய் என்று சொல்லிய கூட்டம் இப்போது அதனையே உண்மை என்று சொல்கிறது.

அன்று உண்மையை சொல்லியவர் துரோகியாக்கப்பட்டது மட்டுமல்ல எதிரியிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு கைதியாக்கப்பட்டார். அன்று தொடர்ந்து பணம் வசூலிக்க தலைவர இருக்கிறார் என்ற பொய் தேவைப்பட்டது. இன்று அதே பொய்யை இன்னொரு கூட்டம் சொல்லி வசூலிப்பில் இறங்கியுள்ளனர். அவர்களை எதிர்ப்பதற்காகவே தலைவர் இல்லை என்பதை நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

பொய்மைக் கூட்டம் இப்போது தலைவர் வருவார் என மதவாதிகள் போல் கோஷம் போடுகிறது. வயது முதிர்ந்த காலத்திலும் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டியவர்கள் விழித்திருந்து பகல்க்கனவு காணுவது வியப்பானதே.
“”ஒரு சமூகத்தின் அறிவியல் மட்டம் என்னவோ அதிலிருந்துதான் தலைவர்களும், சமூகப் பிரதிநிதிகளும் தோன்றுவார்கள்””.

தலைவர் இருக்கிறார் என்ற செய்தி அறிவியலுக்கும் கற்பனவாதத்துக்கும் பொய்மைக்கும் இடையிலான யுத்தமாகும். இந்த யுத்தத்தில் தமிழ் தேசிய இனம் இருபத்தோராம் நூற்றாண்டுக்கு உரியதான வகையில் அறிவுபூர்வமாக தன்னை தகவமைக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பொய்மைகளையும், கற்பனைகளையும், விருப்புவாதங்களையும் கடந்து யதார்த்தம் என்னவோ, நடைமுறை என்னவோ அதற்கு ஏற்ற வகையில் உலகளாவிய அரசியல் போக்கிற்கு இசைவாக்கி அறிவு சார்ந்து மூலோபாயத்தை வகுத்து பயணிப்பதுதான் தமிழ் மக்களின் இன்றைய கடமையாகும்.இல்லையெனில் வழமை போல வரலாறு உங்களை காறி உமிழும்!

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

பிரான்சில் OQTF கடிதம்: சட்டபூர்வமாக முறையீடு செய்வது எப்படி? 

பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்குப் பிரிஃபெக்சர் (Préfecture)  மூலமாக வழங்கப்படும் மிக முக்கியமான நிர்வாக உத்தரவு OQTF (Obligation de Quitter le Territoire Français) ஆகும்....

பிரான்சில் அகதி அந்தஸ்து : OFPRA மற்றும் CNDA நேர்காணல் வழிகாட்டி

பிரான்சில் அகதி அந்தஸ்து (asylum) பெறுவதற்கான சட்ட நடைமுறைகள், புதிய சீர்திருத்தங்கள் காரணமாக மிகவும் கண்டிப்பானதாக மாறியுள்ளன. விண்ணப்பங்களின் முதல் நிலையிலேயே தவறுகள் நடப்பதைத் தவிர்க்க...

கனடா : தவறான பாதையில் சில தமிழ் சிறுமிகள்! பெற்றோர் அவதானம்!

கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை! கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்துச் சிறார்களின் எதிர்காலத்தைப் பலிக்கடாவாக்கும் நிகழ்வுகளுக்கும்...

உணவு – உலக இயங்கியல்

மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்…உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ...

தமிழர் சமையல் கலை – ஒரு பார்வை

சமையல் + வாழ்வும் இன்றைய காலங்களில் சமையல் என்பது சில குறிப்பிட்ட இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம் சில நிமிடங்களில் தயாராகி விடுகின்றன.இல்லையெனில் சாப்பாட்டு கடைகளில்...

அறிவும் அழிவும்

உலகில் வாழ்வதற்கு எவருக்கும் அறிவு தேவைப்படுவதில்லை..அதாவது நீங்கள் அறிவு என நினைக்கும் எதுவுமே தேவைப்படுவதில்லை. மனிதர்கள் உட்பட ஒவ்வொரு உயிருக்குமே அதற்கு வாழ தேவையான அறிவு...

More Articles Like This