விழிப்பும் – விடுதலை உணர்வும்

Must Read

பேருணர்வாக எங்கும் எல்லாவற்றையும் தாண்டி வியாப்பித்திருக்கின்ற ஒரு உணர்வுதான் விடுதலை.மனித பிறவிகள் தமது உடல் ,மன அடையாளங்களை தாண்டி தெரிந்தோ தெரியாமலோ தேடி அலைந்து கொண்டிருக்கின்ற அந்த உணர்வுதான் விடுதலை.

மனிதன் குழந்தைகளாக பிறந்து பெற்றோர்களால் வளர விடாமல் வளர்க்கப்பட்டு,சமூகத்தால் திணிக்கப்பட்டு ஏன் எதுக்கு என்று தெரியாத கொள்கைகள் அடையாளங்கள் கருத்துக்கள் எல்லாம் தமக்குள் வாங்கி கொண்டு உயிர் இல்லாத சமூக ஒழுங்குகள் வாழ மனிதர்கள் பலிகடாவாக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு தலைமுறைகளும் அவர்களின் பின்னால் பிறந்து வரும் தலைமுறைகள் மீது தமது நம்பிக்கைகள் கருத்துக்களை அதிகமாக திணித்துவிடுகின்றன.இத்தனைக்கும் அவர்களுக்கே அவை முழுமையாக தெரிவதில்லை.என்னதான் குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் உலகத்திற்கு வரும் புதிய படைப்புக்கள் கிட்டத்தட்ட மனித இனத்தின் latest Updated versions என்று எடுத்து கொள்ளலாம்.

பிழையாக,தங்களுக்கு தெரியாத சமய,சமூக நம்பிக்கைகளை கருத்துக்களை விதிகளை பெற்றோரை கொண்டு குழந்தைகளுக்கு திணிப்பது சமூக இயங்கியல்தான். சமூக இயங்கியலுக்கு தனிமனிதர்களை பலிகடா ஆக்குவது மட்டும் இதற்கான காரணம் அல்ல..தேவையான நேரங்களில் சமூக இயங்கியலை மேம்படுத்தவும் இவை உதவும்.

எப்படி..? பலவீனமான குழந்தைகள் இவற்றை ஏற்று கொண்டு அதன்படி பின்தொடரும்.இதனால் சமூகத்திற்கு அதிகமான பின்தொடர்பாளர்கள் கிடைக்கும்,சமூக இயங்கியல் வலு பெறும்.பலமான குழந்தைக்கு இவ்வாறு சமய சமூக கருத்துக்கள் நம்பிக்கைகள் திணிக்கப்படும் போதே பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன.அது அவற்றை ஆரம்பத்தில் உள்வாங்கி கொண்டாலும் பின்னர் தனது சொந்த உணர்வால் வரும் அறிவை வைத்து தனக்கு திணிக்கப்பட்டவற்றை எடை போட்டு கொள்கின்றது.

தனக்கு தானே மெய்யறிவை தானே கண்டு கொள்ள தொடங்கிய குழந்தைகளே பலமானவர்கள்,அவர்கள் தமக்கு தமது பெற்றோர் சுற்றம் சமூகத்தால் தவறாக திணிக்கப்பட்டவற்றை ஒவ்வொன்றாக சுய விசாரணை செய்து அறிந்து கொண்டு தம்மை சரிப்படுத்தி கொள்கின்றனர்.இவ்வாறு இவர்கள் தம்மை சீர்ப்படுத்தி கொள்ள ஆரம்பிக்கும் போதே இவர்களுக்கும் அதாவது தனிமனிதருக்கும் சமூகத்துக்குமான போர் தொடங்கிவிடுகின்றது.

சில பலமான தனிமனிதர்கள் தமக்கு நேருகின்ற சமூக திணிப்புக்களை கருத்துக்களை தவிர்ப்பதற்கு தற்காப்பு தாக்குதல்களை நடாத்துவர்கள்.அவ்வாறே அவர்கள் வாழ்வு கழியும்..சிலர் தற்காப்பை தாண்டி சமூகம் மீதும் தாக்குதலை நடாத்துவார்கள்.சமூகம் பெரும் எண்ணிக்கையான பின்தொடர்பாளர்களை கொண்டிருந்தாலும் சில தனிநபர்களின் திட்டங்கள் முன்னால் அதனால் நின்று தாக்குபிடிக்க முடியாது. உலக வரலாறு முழுதுமே பலவீனமான தனிநபர்களை சமூகம் அடிமைப்படுத்துவதும் , பலமான மனிதர்கள் சமூகத்தை அடிமைப்படுத்துவதாகவும் இயங்கி வருகின்றது.

சமூகம் இவ்வாறான தாக்குதல்களினால் பாதிப்படைவதன் மூலம் தன்னை காலத்திற்கு ஏற்ப புதுப்பித்து கொள்கின்றது.கூடவே அடுத்தடுத்த தலைமுறைகளைகளில் பலவீனமானவர்களை தாக்கி தன்னை பின்தொடர வைக்கின்றது.சமூகம் தனிநபர்களை பாதிப்பதன் மூலம் எவ்வாறு சில தனிமனிதர்களை புதுப்பிக்க உதவு செய்கின்றதோ அவ்வாறே தனிநபர்களும் சமூகம் மீது தாக்குதல் நடாத்தி அதனை புதுபிக்க உதவுகிறார்கள்..

சமூக இயங்கியல் இவ்வாறு சமனிலையடைந்து கொள்கின்றது.இரண்டில் மாறி மாறி எந்த பக்கம் நீங்கள் நின்றாலும் உங்களால் சமனிலையை கண்டுகொள்ள முடியாது.இரண்டையும் தாண்டி உங்களால் நிற்கும் போதே அதன் சமனிலையை கண்டுகொள்ள முடியும்.இங்கு எந்தவொரு இயங்கியலையும் இதில் எந்த தரப்பாலும் தனித்து தீர்மானிக்க முடியாது.உலகம் இன்று இவ்வாறே இயங்குகின்றது.

21ம் நூற்றாண்டில் மனித சமுதாயம் மிகப்பெரும் நெருக்கடியில் இருக்கின்றது.தனி மனித விழுமியங்களுக்கும்
, சமூக , நாடுகளின் ஒழுங்களுக்கும் இடையில் மிகப்பெரும் கொதிநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன…இந்த மாற்றங்கள் எமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பாகமாக ஆகியிருக்கின்றது.எங்களுக்கு அவை பிடிக்குதோ இல்லையோ அவற்றை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்..

இந்த நெருக்கடி நிலைமைகள் எம்மை பொறுத்தவரை இரண்டு விதங்களாக பார்க்கப்பட முடியும்,ஒன்று ஆபத்து,இன்னொன்று சந்தர்ப்பம்..

இப்போது எமது முன்னகர்வுகள் என்ன? எதை விட்டு கொடுக்க போகிறோம்? எதனை உள்வாங்கி எப்படி எம்மை புதுப்பித்து கொள்ள போகிறோம்? எதனை உலகிற்கு கொடுக்க போகின்றோம்? இவை எப்படியாக இருக்கின்ற போதிலும் எமது அடிப்படை மரபுகளை பேணி பாதுகாக்க போராட வேண்டிய தேவை எமக்கு எப்போதுமே அத்தியாவசியமானது.

எத்தனை வழிகள் இருக்கின்றதோ எத்தனை திசைகள் இருக்கின்றவோ அத்தனை வழிகளிலும் திசைகளிலும் எமது போராட்டம் நடைபெற்றே ஆக வேண்டும்.நாம் எமது சிந்திக்கும் முறைகளில் மாற்றத்தை கொண்டு வந்து எமது உடல்,மனம் தாண்டிய ஒரு அகவிழிப்புணர்வு நிலையை அடைய வேண்டும்.நாம் இந்த உடலோ,மனமோ,எங்கிருந்தோ வந்து செல்லும் எண்ணங்களோ,புலனுணர்வுகளோ அல்ல,இவை குறித்த பிரக்ஞையுடன் இருப்பவரே நாம்,அந்த அக விழிப்புணர்வு நிலையே நாம்.

இந்த நிலையை அடைவர்களால் வழிநடாத்தப்படுகின்ற அல்லது அவர்களை பின்பற்றி அதாவது அந்த நிலையை அடைய தாமும் முயல்கின்ற ஒரு சமுதாய கூட்டத்தினால் மட்டுமே விடுதலையை பெற முடியும்.அதற்கான போராட்டத்தை கொண்டு செல்ல முடியும்.எமது பிறப்பு,இறப்பு,இடைப்பட்ட வாழ்க்கை பற்றி தெளிவு இருந்தால் மட்டுமே எம்மால் இந்த பிரபஞ்ச இயங்கியலை புரிந்து கொள்ள முடியும்.

இங்கு அந்த அக விழிப்புணர்வு நிலைதான் விடுதலை.. வெளிபுற சமூகங்கள் தாம் அடைந்ததாக கொண்டாடும் எவையும் விடுதலை அல்ல! ஒரு போராளி தன்னுடைய விடுதலையை தக்க வைக்கவே போராடுகின்றான்,பெற அல்ல! ஏனென்னால் அது வெளியில் இருந்து பெறப்படுவது அல்ல! அந்த அக விழிப்புணர்வு விடுதலையை பேணும் பொருட்டு அவன் தன் உடலை கொல்ல அல்லது கொல்லப்படவும் அனுமதிக்கின்றான்.உலகெங்கும் நடந்த விடுதலை போராட்டங்களின் புரியாத புதிரான அடிப்படை இதுதான்!

நாம் எமது சமூகத்தின் நிலத்தின் வாழ் அமைந்த எமது வரலாறு,பண்பாட்டு கலாச்சார தொடர்ச்சிகளை நாம் பின்னோக்கி சென்று சரியாக எமக்குள் உள்வாங்கி அதற்கு தகுந்தவாறே எமது முன்னகர்வுகள் இருக்க வேண்டும்.அப்படி செய்யும் போதே நாம் பாதி வெற்றி பெற்றுவிடுவோம்.ஒரு சமுதாயம் பிறகு பார்க்கலாம் என்று அறியாமை பயத்தால் உலகால் அமைந்த போலி நல்லிணக்கங்கள்,தலையும் வாலும் இல்லாத ஜனநாயக கோட்பாடுகளை நம்பி பிணங்களாக உணர்விழந்து வாழ்வதை காட்டிலும் அகவிழிப்புணர்வுடன் விடுதலையடைந்தவர்கள் தமது நிலையாத உடலை பணயம் வைத்து நிலையான அகவிழிப்புணர்வு சுதந்திரத்தை காத்து கொள்கிறார்கள்.

விடுதலையடைந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் எதை இழப்பது இழப்பல்ல என்று…!

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

பிரான்சில் OQTF கடிதம்: சட்டபூர்வமாக முறையீடு செய்வது எப்படி? 

பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்குப் பிரிஃபெக்சர் (Préfecture)  மூலமாக வழங்கப்படும் மிக முக்கியமான நிர்வாக உத்தரவு OQTF (Obligation de Quitter le Territoire Français) ஆகும்....

பிரான்சில் அகதி அந்தஸ்து : OFPRA மற்றும் CNDA நேர்காணல் வழிகாட்டி

பிரான்சில் அகதி அந்தஸ்து (asylum) பெறுவதற்கான சட்ட நடைமுறைகள், புதிய சீர்திருத்தங்கள் காரணமாக மிகவும் கண்டிப்பானதாக மாறியுள்ளன. விண்ணப்பங்களின் முதல் நிலையிலேயே தவறுகள் நடப்பதைத் தவிர்க்க...

கனடா : தவறான பாதையில் சில தமிழ் சிறுமிகள்! பெற்றோர் அவதானம்!

கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை! கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்துச் சிறார்களின் எதிர்காலத்தைப் பலிக்கடாவாக்கும் நிகழ்வுகளுக்கும்...

உணவு – உலக இயங்கியல்

மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்…உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ...

தமிழர் சமையல் கலை – ஒரு பார்வை

சமையல் + வாழ்வும் இன்றைய காலங்களில் சமையல் என்பது சில குறிப்பிட்ட இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம் சில நிமிடங்களில் தயாராகி விடுகின்றன.இல்லையெனில் சாப்பாட்டு கடைகளில்...

அறிவும் அழிவும்

உலகில் வாழ்வதற்கு எவருக்கும் அறிவு தேவைப்படுவதில்லை..அதாவது நீங்கள் அறிவு என நினைக்கும் எதுவுமே தேவைப்படுவதில்லை. மனிதர்கள் உட்பட ஒவ்வொரு உயிருக்குமே அதற்கு வாழ தேவையான அறிவு...

More Articles Like This