பிரான்சில் உணவகம்/டேக்-எவே (Takeaway) தொடங்குதல்: HACCP சுகாதாரச் சான்றிதழ் கட்டாயம்

Must Read

பிரான்சில் உணவகம் (Restaurant), பாஸ்ட்ஃபுட் கடை அல்லது டேக்-எவே (Takeaway) போன்ற உணவுத் தொழிலை தொடங்கத் திட்டமிடுபவரா நீங்கள்? உணவுப் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் நலனைப் பேணுவதற்காகப் பிரெஞ்சு அரசு கடுமையான சட்ட நடைமுறைகளைக் கொண்டுள்ளது. இதில் மிகவும் அவசியமான விதிமுறையான HACCP (Hazard Analysis Critical Control Point) சுகாதாரச் சான்றிதழ் மற்றும் ஆய்வுகள் குறித்து கீழே விரிவாக விபரிக்கப்படுள்ளது. 

  1. HACCP பயிற்சி மற்றும் சான்றிதழ் ஏன் கட்டாயம்?

பிரான்சில் உணவுத் துறையில் வணிகம் நடத்தும் எவருக்கும் HACCP விதிமுறைகளின் கீழ் உணவுப் பாதுகாப்புப் பயற்சி பெறுவது சட்டபூர்வமாகக் கட்டாயமாகும்:

  • பயிற்சி விபரங்கள்: உணவு தயாரிப்பு, சேமிப்பு, குளிரூட்டும் முறைகள் (La chaîne du froid) மற்றும் குறுக்கு மாசுபடுதல் (Contamination croisée) போன்றவற்றைத் தடுத்தல் குறித்து 14 மணிநேரப் பயிற்சி வழங்கப்படுகிறது.
  • அவசியம்: வணிகத்தில் பணிபுரியும் குறைந்தபட்சம் ஒரு ஊழியராவது (உரிமையாளர் உட்பட) இந்த அதிகாரபூர்வ HACCP சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். 
  1. DDPP ஆய்வுகள் (Inspection Sanitaire) மற்றும் கட்டுப்பாடுகள் 

உணவகங்களின் சுகாதார தரத்தை உறுதிப்படுத்த பிரெஞ்சு அரசின் கீழ் இயங்கும் DDPP (Direction Départementale de la Protection des Populations) துறை அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

  • சுகாதார மதிப்பீடு: சமையலறைச் சுத்திகரிப்பு, உணவுப் பொருட்களின் காலாவதித் திகதிகள், மற்றும் வெப்பநிலைப் பதிவுகள் (Relevés de température) ஆகியவை முறையாகப் பராமரிக்கப்படுகிறதா எனச் சோதிக்கப்படும்.
  • Alim’confiance தரம்: ஆய்வுகளின் முடிவுகள் பொதுவெளியில் வெளிப்படையாக வெளியிடப்படும். கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால்,கடைக்கு உடனடித் தடை விதிக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
  1. பின்பற்ற வேண்டிய முக்கிய சுகாதார நடைமுறைகள் 
  • Traceability (உணவுமூலத் தூய்மை): பயன்படுத்தப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் எங்கு வாங்கப்பட்டன என்பதற்கான ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் குறைந்தது சில மாதங்களுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • Hygiène du personnel: பணியாளர்கள் முறையான சீருடை, தலைக்கவசம் (Charlotte) மற்றும் கையுறைகளைப் பயன்படுத்துவதுடன், தனிநபர் சுகாதாரத்தை மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.

சரியான  HACCP பயிற்சியைப் பெற்று, சுகாதார விதிகளுக்கு உட்பட்டு உணவகங்களை நடத்துவதன் மூலம் சட்டபூர்வச் சிக்கல்களைத் தவிர்த்து வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற முடியும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

பிரான்ஸ் உணவகங்களில் கிடைக்கும் டிப்ஸ் (Tips) பணத்திற்கு வரி: புதிய சட்ட விதிகள் 

பிரான்சில் உணவகங்கள் (Restaurants), கஃபேக்கள் (Cafés) மற்றும் ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்கள் வழங்கும் டிப்ஸ் (Pourboires) தொகையானது அவர்களின் கூடுதல் வருமானமாக அமைகிறது. பிரெஞ்சு...

பிரான்ஸ் உணவகங்களில் பணிபுரிபவர்களின் வேலை நேரம், ஓவர்டைம், சம்பள உரிமைகள்

பிரான்சில் தமிழ் சமூகத்தினர் அதிகளவில் பணிபுரியும் துறைகளில் உணவகத் துறையும் (Restauration) ஒன்றாகும்.பிரான்சின் பொதுத் தொழிலாளர் சட்டங்களைத் தவிர, உணவகத் துறைக்கென தனியான Convention Collective...

பிரான்ஸ் மாணவர்களுக்கு Navigo Imagine R அட்டை: விண்ணப்பிக்கும் முறை, சலுகைகள்

பிரான்சின்  இல்-டி-பிரான்ஸ் (Île-de-France) பிராந்தியத்தில் பாடசாலைகளில் படிக்கும் சிறுவர்கள் மற்றும் பல்கலைக்கழக உயர்கல்வி மாணவர்களுக்குப் பொதுப் போக்குவரத்துச் செலவைக் கணிசமாகக் குறைக்க Navigo Imagine R...

பிரான்ஸ் மெட்ரோ, பஸ்களில் அபராதம்: RATP முக்கியமான சட்டங்கள் 

பிரான்சின் பாரிஸ் மற்றும் அதன் சுற்றியுள்ள பிராந்தியங்களில் இயங்கும் RATP (Régie Autonome des Transports Parisiens) பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது, அதற்கான சட்ட...

Navigo Pass கட்டணச் சலுகைகள்: Navigo Gratuité இலவச அட்டை பெறுதல்

பிரான்சின் இல்-டி-பிரான்ஸ் (Ile-de-France) பிராந்தியத்தில் வாழும் மக்களின் தினசரி வாழ்க்கையில் Navigo பயண அட்டை மிகமுக்கியமான அங்கமாகும். வேலைக்குச் செல்பவர்கள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும்...

பிரான்சில் முதன்முறையாக வரித் தாக்கல் செய்பவர்களுக்கான எளிய வழிகாட்டி 

பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் ஒவ்வொரு நபரும் தங்களின் ஆண்டு வருமானத்தை அரசுக்குத் தெரிவிப்பது சட்டபூர்வ கடமையாகும். குறிப்பாக பிரான்சில் புதிய குடியிருவாசிகளாக நுழைபவர்கள் மற்றும் முதன்முறையாக...

More Articles Like This