பிரான்ஸ் உணவகங்களில் பணிபுரிபவர்களின் வேலை நேரம், ஓவர்டைம் மற்றும் சம்பள உரிமைகள்

Must Read

பிரான்சில் தமிழ் சமூகத்தினர் அதிகளவில் பணிபுரியும் துறைகளில் உணவகத் துறையும் (Restauration) ஒன்றாகும்.பிரான்சின் பொதுத் தொழிலாளர் சட்டங்களைத் தவிர, உணவகத் துறைக்கென தனியான Convention Collective Nationale HCR (Hôtellerie-Restauration) என்ற சிறப்புத் தொழில் கூட்டமைப்புச் சட்டம் இயற்றப்படுள்ளது. உணவக ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதன்மை உரிமைகளை இங்கு பார்ப்போம்.

  1. குறைந்தபட்ச ஊதியம் (SMIC) மற்றும் உணவுக் கொடுப்பனவு (Avantage en nature)
  • சம்பளம்: பிரான்சில் உணவக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை ஊதியம் அரசால் நிர்ணயிக்கப்பட்ட SMIC (Salaire Minimum Interprofessionnel de Croissance) தொகையை விடக் குறைவாக இருக்கக் கூடாது.
  • உணவுக் கொடுப்பனவு: உணவகங்களில் பணிபுரிபவர்களுக்கு வேலை நேரத்தில் உணவு வழங்கப்பட வேண்டும் அல்லது அதற்கு ஈடாக ஊதியச் சீட்டில் (Fiche de paie) Avantage en nature nourriture  என்ற அடிப்படையில் தொகை சேர்க்கப்பட வேண்டும்.
  1. வேலை நேரம் மற்றும் ஓவர்டைம் (Heuresன் Supplémentaires) 

பிரான்சில் சட்டபூர்வமாக வாராந்திர வேலை நேரம் 35 மணி நேரமாகும். ஆனால், HCR ஒப்பந்தத்தின்படி வாரத்திற்கு 39 மணி நேரம் வரை பணியாற்ற அனுமதி உண்டு:

  • 36 முதல் 39 மணி நேரம் வரை: செய்யப்படும் கூடுதல் நேரத்திற்கு 10% கூடுதல் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  • 40 முதல் 43 மணி நேரம் வரை: செய்யப்படும் ஓவர்டைமுக்கு 20% கூடுதல் ஊதியம் அல்லது அதற்கு ஈடான ஓய்வு நேரம் (Repos compensateur) கிடைக்க வேண்டும்.
  • 44 மணி நேரத்திற்கு மேல்: 50% கூடுதல் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும்.
  1. வாராந்திர ஓய்வு நாட்கள் (Repos Hebdomadaire)

உணவக ஊழியர்களின் உடல்நலனைப் பாதுகாக்க ஓய்வு நாட்கள் குறித்துக் கடுமையான விதிகள் உள்ளன:

  • ஒவ்வொரு ஊழியருக்கு வாரத்திற்குத் தொடர்ச்சியாகக் குறைந்தபட்சம் 2 நாட்கள் ஓய்வு (2 jours de repos) வழங்கப்பட வேண்டும்.
  • இதில் குறைந்தது 1.5 நாட்கள் (1 day and a half) தொடர்ந்து ஒன்றாக இருக்க வேண்டும்.
  • இரண்டு வெள்ளி நாட்களுக்கு இடையே குறைந்தபட்சம் 11 மணி நேர இடைவெளி (Repos quotidien)இருப்பது கட்டாயமாகும்.

உங்கள் ஊதியச் சீட்டில் (Bulletin de paie) மணிநேரங்கன் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது உங்கள் சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்க உதவும்.  

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

பிரான்ஸ் மாணவர்களுக்கு Navigo Imagine R அட்டை: விண்ணப்பிக்கும் முறை, சலுகைகள்

பிரான்சின்  இல்-டி-பிரான்ஸ் (Île-de-France) பிராந்தியத்தில் பாடசாலைகளில் படிக்கும் சிறுவர்கள் மற்றும் பல்கலைக்கழக உயர்கல்வி மாணவர்களுக்குப் பொதுப் போக்குவரத்துச் செலவைக் கணிசமாகக் குறைக்க Navigo Imagine R...

பிரான்ஸ் மெட்ரோ, பஸ்களில் அபராதம்: RATP முக்கியமான சட்டங்கள் 

பிரான்சின் பாரிஸ் மற்றும் அதன் சுற்றியுள்ள பிராந்தியங்களில் இயங்கும் RATP (Régie Autonome des Transports Parisiens) பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது, அதற்கான சட்ட...

Navigo Pass கட்டணச் சலுகைகள்: Navigo Gratuité இலவச அட்டை பெறுதல்

பிரான்சின் இல்-டி-பிரான்ஸ் (Ile-de-France) பிராந்தியத்தில் வாழும் மக்களின் தினசரி வாழ்க்கையில் Navigo பயண அட்டை மிகமுக்கியமான அங்கமாகும். வேலைக்குச் செல்பவர்கள், குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும்...

பிரான்சில் முதன்முறையாக வரித் தாக்கல் செய்பவர்களுக்கான எளிய வழிகாட்டி 

பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் ஒவ்வொரு நபரும் தங்களின் ஆண்டு வருமானத்தை அரசுக்குத் தெரிவிப்பது சட்டபூர்வ கடமையாகும். குறிப்பாக பிரான்சில் புதிய குடியிருவாசிகளாக நுழைபவர்கள் மற்றும் முதன்முறையாக...

பிரான்ஸ் வேலை இழந்தால், ARE உதவித் தொகை: Travail பதிவு

பிரான்சில் பணியாற்றும் ஊழியர்கள் எதிர்பாராத விதமாக வேலையை இழக்கும் போது அல்லது ஒப்பந்தம் முடியும் போது, அவர்களின் நிதி நிலையைப் பாதுகாக்க France Travail (முந்தைய...

பிரான்சில் Carte Vitale: CPAM, Mutuelle மருத்துவக் காப்பீடு வழிகாட்டி

பிரான்சில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான உரிமையாகும். பிரெஞ்சு அரசின் தேசிய மருத்துவக் காப்பீட்டு அமைப்பான CPAM (Caisse Primaire...

More Articles Like This