கனடா : கனடாவில் தவறாகப் பயன்படுத்தப்படும் தமிழ் சிறுமிகள்! பெற்றோர் அவதானம்!

Must Read

கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை! கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்துச் சிறார்களின் எதிர்காலத்தைப் பலிக்கடாவாக்கும் நிகழ்வுகளுக்கும் எதிரான கண்டனம்! கனடாவில் நமது ஈழத்துச் சிறார்களுக்குச் சினிமா நடனம் கற்றுக்குக் கொடுக்கும் சில நடனக் குழுக்கள் தங்களின் வருமானத்திற்காகவும், சமூக வலைத்தளங்களில் (Whatsapp, Instagram, TikTok, Facebook) ‘ரீல்ஸ்’ (Reels) மோகத்திற்காகவும் நமது வருங்காலச் சந்ததியினரைப் பயன்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலையும், அங்குள்ள ஒரு சினிமா நடிகரையும் மையப்படுத்தி, நமது ஈழத்துச் சிறார்களைத் தவறான வழியில் கொண்டு செல்ல இக்குழுக்கள் முயல்கின்றன. தமிழகக் கூத்தாடிகளின் குறி, புலம்பெயர் இளம் சிறார்களின் பணத்தை ஆட்டையினைப் போடுவதே, இதுவரை இவர்களினால் ஈழத்தமிழினம் எந்தவித நன்மைகளையும் காணவில்லை, ஆனால் இன்றோ இளம் சிறார்களின் சினிமா மோகத்தை வைத்து ஏமாற்றுகின்றார்கள்.

முன்பே இரு ஜேர்மன், சுவிஸ் தமிழச்சிகள் சில தமிழ் நடிகர்களிடம் பணத்தையும், கற்பையும் இழந்து வழக்கு நடாத்தியும் உள்ளனர். திருமணம் செய்வதாகக் கூறிப் பணத்தை ஏமாற்றியிருந்தார்கள். தமிழர்களின் வெகுளித்தன்மையும், சினிமா மோகமும் இருக்கும் மட்டும், இப்படியான மோசடிப் பேர்வழிகளும் இருப்பார்கள். இதுவரை விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியோ அல்லது ஈழத்தமிழர்கள் பட்ட துயரங்களை வெளிப்படுத்தும் விதமாகவோ இந்த நடனக் குழுக்கள் ஏதேனும் ஒரு ‘ரீல்ஸ்’ (Reels) செய்து வெளியிட்டுள்ளனவா?

ஈழப்போராட்டத்திற்கு உதவாதவர்களுக்காகக் கொடி பிடிப்பதா? நடிகர் விஜய் அல்லது மற்ற எந்த சினிமா நடிகர்களுக்கும் நீங்கள் ரசிகர்களாக இருப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், எமது ஈழப்போராட்டத்திற்கோ அல்லது மக்களின் துயரத்திற்கோ எந்த விதத்திலும் உதவாத ஒரு நடிகருக்காக/ அரசியல்வாதிக்காக எமது சிறார்களைப் பயன்படுத்திக் கொடி தூக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தமிழுக்காக தமிழ் அடையாளத்திற்காகவும் நீங்கள் உண்மையிலேயே ஏதேனும் செய்ய விரும்பினால், தமிழ்மொழி வாழக் குரல் கொடுத்தீர்களா? ‘நாம் தமிழர்’ போன்ற தமிழ் உணர்வு சார்ந்த அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கோ அல்லது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கனடாவில் கோலாகலமாக நடக்கும் ‘தமிழர் தெருவிழா’ (Tamil Fest) பற்றியோ எப்போதாவது விழிப்புணர்வு ரீல்ஸ் பதிவிட்டுள்ளீர்களா?

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கனடாவில் நாம் போற்றிப் பாதுகாத்து வந்த ஈழத்துக் கலை, கலாச்சாரப் பாரம்பரியத்தை, வெறும் சினிமா கவர்ச்சிக்கும் சமூக வலைத்தள விளம்பரங்களுக்கும் ஈடாகத் தாரை வார்ப்பது ஏற்புடையதல்ல. எமது மண்ணுக்கோ, மக்களுக்கோ உதவாதவர்களை எமது சிறார்களின் தலைவர்களாகச் சித்தரிப்பது, எமது சமூகத்தின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளும் செயலாகும்.

ஈழத்துப் பெண் ஒருவரைத் திருமணம் செய்து 30 ஆண்டுகால வாழ்க்கைக்குப் பிறகு அவரை ஒதுக்கிவிட்டு வாழும் ஒரு சினிமா நடிகரை எமது ஈழத்துச் சிறார்களுக்கு முன்மாதிரியாகக் காட்டுவது எந்த விதத்தில் நியாயமாகும்? கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை நடனம் பயில அனுப்பும் முன் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

எமது கலை, கலாச்சாரத்திற்கும் வரலாற்றுக்கும் மதிப்பளிக்கும் அமைப்புகளுக்கு மட்டும் உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள். உங்கள் பிள்ளைகளைச் சுயநலக் குழுக்களின் ‘ரீல்ஸ்’ விளம்பரப் பொருட்களாகப் பயன்படுத்த அனுமதித்து விடாதீர்கள். இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் நடனக் குழுக்களிடம் தயக்கமின்றி தைரியமாகக் கேள்விகளை எழுப்புங்கள். இந்தியாவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ உள்ள மக்கள் தங்களுக்குப் பிடித்தவர்களைத் தலைவராகக் கொண்டாடுவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.

ஆனால், எமது ஈழத்துச் சிறார்களை அந்தப் பாதைக்குத் திசைதிருப்புவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எமது ஈழத்துச் சிறார்களின் எதிர்காலத்தையும், எமது ஈழத்துக் கலை, கலாச்சாரத்தையும் பாதுகாக்க இத்தகைய செயல்பாடுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்போம்.

முந்தைய கட்டுரை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

உணவு – உலக இயங்கியல்

மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்…உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ...

தமிழர் சமையல் கலை – ஒரு பார்வை

சமையல் + வாழ்வும் இன்றைய காலங்களில் சமையல் என்பது சில குறிப்பிட்ட இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம் சில நிமிடங்களில் தயாராகி விடுகின்றன.இல்லையெனில் சாப்பாட்டு கடைகளில்...

அறிவும் அழிவும்

உலகில் வாழ்வதற்கு எவருக்கும் அறிவு தேவைப்படுவதில்லை..அதாவது நீங்கள் அறிவு என நினைக்கும் எதுவுமே தேவைப்படுவதில்லை. மனிதர்கள் உட்பட ஒவ்வொரு உயிருக்குமே அதற்கு வாழ தேவையான அறிவு...

வேலையை எப்படி செய்வது?

உங்கள் வேலையை செய்யுங்கள்,செவ்வனே செய்யுங்கள்.சிறியதோ பெரியதோ சரியாக செய்யப்படும் வேலைகளே உலகில் உன்னதமானது.நீங்கள் மேசை துடைப்பவராக இருந்தாலும் சீரான கவன குவிப்பு,ஒழுக்கத்தின் மூலம் அந்த வேலையை...

ஆவதும் பெண்ணாலே அழிவதும்…

உலகம்,பல கண்டங்கள்,பல நாடுகள்,பல நகரங்கள்,பல ஊர்கள்,வீடுகள் என்று பல பரிமாணங்களாக வெளியில் தெரிந்தாலும் அதன் மூலம் அலகு ஒரு குடும்பமாகும்.குடும்பத்தின் மூலம் பெண்ணாகும்.அத்தனை ஆரம்பமும் பெண்ணில்...

குடும்ப வாழ்வு சொல்லும் அர்த்தம்

சமூகம் குடும்பங்களினால் ஆனது..குடும்பங்கள் ஆண் பெண் என்ற தனி மனிதர்கள் ஒன்று சேரும் போது உருவாகின்றது.தனிமனிதர்கள் குடும்பம் என்ற அமைப்பினூடாகவே சமூகத்தை படைத்து நாடாக்கி உலக...

More Articles Like This