பிரான்ஸ்: லாகூர்நெவ் பகுதியில் சுகாதார சீர்கேடு! 17 கடைகளுக்கு பூட்டு!

Must Read

பாரிஸ் அருகே உள்ள சென்-சென்ட்-டெனிஸ் மாவட்டத்தின் லா கோர்னவ் (La Courneuve) நகரில் உள்ள ‘Quatre-Routes’ பகுதியில், Paul-Vaillant-Couturier வர்த்தகத் தெருவில் கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் சுகாதாரத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சுமார் 30 கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில், சுகாதார விதிகளை மீறியதற்காக 17 கடைகள் நிர்வாக உத்தரவின் பேரில் தற்காலிகமாக மூடப்பட்டன. இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரே தெருவில் இத்தனை கடைகள் மூடப்பட்டது அசாதாரணமானது என்று நகரத்தின் புதிய நகரமுதல்வர் அலி டியுவாரா (Aly Diouara) குற்றம் சாட்டியுள்ளார். இது அரசியல் சதி என்றும் அவர் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சென்-சென்ட்-டெனிஸ் மாகாண ஆளுநர் ஜூலியன் சார்லஸ் (Julien Charles), “இந்தச் சோதனைகள் மற்றும் மூடல் நடவடிக்கைகளுக்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்கிறேன். நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்வதில் நாங்கள் மூர்க்கத்தனமாகச் செயல்படுகிறோம். எந்தவொரு குறிப்பிட்ட நகரத்தையும் வேண்டுமென்றே குறிவைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 1500க்கும் மேற்பட்ட சோதனைகள் நடாத்தப்பட்டு அவற்றில் 183 கடைகள் மூடப்பட்டதாகவும் அதில் 127 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு விட்டதாகவும் லா கூர்நெவ் பகுதியில் மூடப்பட்ட 17 கடைகளில் 15 கடைகள் குறைகளை சரி செய்து மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூடப்பட்டதற்கான முக்கிய காரணங்கள்

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, முக்கியமாக பின்வரும் சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக கடைகள் மூடப்பட்டன:

  • குளிர் சங்கிலி (Cold chain) சரியாகப் பராமரிக்கப்படாதது
  • எலி, சுண்டெலி போன்ற பூச்சிகளைக் கட்டுப்படுத்தாதது
  • பொதுவான சுகாதார மற்றும் தூய்மை குறைபாடுகள்

சில கடை உரிமையாளர்கள், சோதனை நடந்த நேரத்தில் ஏற்பட்ட வெப்ப அலை காரணமாக குளிர் சங்கிலியைப் பராமரிப்பது கடினமாக இருந்ததாகக் கூறியுள்ளனர்.குறித்த பகுதியில் ஈழத்தமிழர் மற்றும் தெற்காசிய இனத்தவர்கள் அதிகமான கடைகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

பிரான்ஸ் தமிழருக்கு 30 ஆண்டுகள் சிறை! நாட்டுக்கு அனுப்ப உத்தரவு!

யாழில் சிறுமி ஒருவருக்கு திருமண ஆசை காட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ் நீதிமன்றம்...

பிரான்சில் Dublin Transfer சிக்கல்: விரல் ரேகை விதி, சட்டபூர்வ வழிமுறைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Dublin Regulation) படி, ஒரு அகதி ஐரோப்பாவிற்குள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த அல்லது விரல் ரேகை (Eurodac...

ஊருக்கு போன இடத்துல பிறந்த நாள் கொண்டாட்டம்! இப்படியும் நடக்குது!

ஊரில பிறந்த நாள் ஒன்றுக்கு போனா,இரவு 9 மணியாச்சு, கேக் வெட்டினா பாடு இல்லை… இது என்னடா என்று சாப்பிட போன இடத்தில் கைக்கு எட்டினது...

பிரான்சில் கடும் எச்சரிக்கை! தமிழர்கள் அவதானம்! சுட்டெரிக்கப்போகும் வெயில்

பிரான்ஸ் மக்கள் மே மாத இறுதி முதல் இதுவரை மூன்று கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொண்டுள்ளனர். இப்போது நான்காவது வெப்ப அலை வரவுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள்...

மண்ணுக்கடியில் புதைக்கப்பட்ட உண்மைகள். செம்மணியிலும் தொடருமா?

அரசு காலம் கடத்தலாம். அரசியல் மறைக்கலாம். அதிகாரம் மௌனமாக இருக்கலாம். ஆவணங்கள் அழிக்கப்படலாம். சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம். ஆனால் மண், தனது அடியில் புதைக்கப்பட்ட உண்மையை ஒருநாள்...

பிரித்தானியா வெப்ப அலை பாதிப்பு! வரும் அடுத்த கட்டம்!

பிரித்தானியாவில் 2026 மே,ஜூன் மாதங்களில் பதிவான சாதனை வெப்ப அலை காரணமாக,இதுவரை ஆயிர கணக்கான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும்...

More Articles Like This