மண்ணுக்கடியில் புதைக்கப்பட்ட உண்மைகள். செம்மணியிலும் தொடருமா?

Must Read

அரசு காலம் கடத்தலாம். அரசியல் மறைக்கலாம். அதிகாரம் மௌனமாக இருக்கலாம். ஆவணங்கள் அழிக்கப்படலாம். சாட்சிகள் அச்சுறுத்தப்படலாம். ஆனால் மண், தனது அடியில் புதைக்கப்பட்ட உண்மையை ஒருநாள் வெளிக்கொணரும்.

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த மூன்று தசாப்தங்களாக கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் இதற்குச் சாட்சியாக உள்ளன. இதுவரை இலங்கையில் 32க்கும் மேற்பட்ட மனிதப் புதைகுழிகள். இவ் இடங்களில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் வெறும் தடயவியல் ஆதாரங்கள் அல்ல, அவை குடும்பங்களின் நீண்டகாலக் காத்திருப்பு, பதிலின்றி முடிந்த வாழ்க்கைகள் மற்றும் இன்னும் நிறைவேறாத நீதியின் நினைவுச் சின்னங்கள்.

2025, 2026ஆம் ஆண்டு செம்மணி அகழாய்வு இலங்கை முழுவதும் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. நூற்றுக்கணக்கான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இது உண்மையைக் கண்டறியும் ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
ஆனால், இதே நேரத்தில் ஒரு கவலையும் எழுகிறது.

அந்தக் கவலை புதியதல்ல.
மாத்தளை கூட்டுப் புதைகுழி விசாரணையின் அனுபவம் இன்னும் பலரின் நினைவில் உள்ளது.
2012 ஆம் ஆண்டு மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவை நீதிக்கான ஒரு முக்கிய திருப்பமாகக் கருதப்பட்டன. தடயவியல் தொல்லியலாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா அவை பல மனிதர்களின் எச்சங்கள் என்றும், சாதாரண அடக்கமல்ல எனவும் கருத்து தெரிவித்தார். பின்னர் அமெரிக்காவில் செய்யப்பட்ட கார்பன் காலக்கணிப்பு பரிசோதனை அவை 1950க்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற முடிவை வெளியிட்டது. அதன்பின் chain of custody, மாதிரிகளின் நம்பகத்தன்மை மற்றும் ஆய்வக நடைமுறைகள் குறித்து சர்ச்சைகள் எழுந்தன. இறுதியில் வழக்கு முன்னேற்றமின்றி நின்றது.

இந்த வரலாறு காரணமாகவே, செம்மணி அகழாய்வு தொடர்பாக அதிக வெளிப்படைத்தன்மையை கோரி நிற்கிறோம்.
நாம் ஏற்கனவே எச்சரித்தது போலவே

  • இப்போது நடைபெறும் அகழ்வுப்பணிகள் திட்டமிட்டது போல 56 நாட்கள் நடைபெறும்.
  • அதன் பின்னர் எடுக்கப்பட்ட எலும்புகள் தொடர்பான சட்டமருத்துவ மற்றும் தடயவியல் ஆய்வுகளுக்காக பணிகள் நிறுத்தப்படும்.
  • எலும்புகள் மீதான Anthropology Study ஆரம்பமாகும்.
  • எலும்புகளின் பால், வயது, ? கொலைக்கான காரணம் போன்றவை அறியப்படும்.

இந்த படிநிலை வரை சரி, ஆனால் அதன் பின்னர் ?எடுக்கப்படும் மாதிரிகள் காலக்கணிப்பு என்பதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படும். அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது வரலாறு.
இந்தக் கவலை வெறும் ஊகத்தின் அடிப்படையில் அல்ல. கடந்த கால மனிதப் புதைகுழி விசாரணைகளின் அனுபவங்களிலிருந்து உருவானது. அதனாலேயே கட்டுரையின் ஆரம்பத்தில் மாத்தளை புதைகுழிகள் பற்றிக் குறிப்பிட்டேன்.
அதிகாரம் எப்போதும் ஒரே மாதிரியானது, அதில் அப்பாவிகளுக்கு நீதி கிட்டாது. அதில் இனம், மத வேறுபாடு கிடையாது.

இன்றைய நிலவரப்படி, குற்றப்புலனாய்வுத் துறை மேலதிக கால அவகாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது ஒரு வழக்கமான நீதிமன்ற நடைமுறையாக இருக்கலாம். அந்த கால அவகாசம் நான் மேலே சொன்ன எலும்புகளை பரிசோதிப்பதற்காக காலம். அதேவேளை, விசாரணை தாமதமடையக் கூடாது என்ற அச்சமும் குடும்பங்களிடையே உள்ளது.

அதனால், செம்மணி விசாரணை வெற்றிகரமாக அமைய வேண்டுமெனில் சில அடிப்படை நிபந்தனைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்:

  • ஆதாரங்களின் Chain of Custody முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • அகழாய்வு முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும். இடைநிறுத்தம் இறுதி முடிவாக மாறக்கூடாது.
  • கார்பன் காலக்கணிப்பு இறுதி முடிவாகக் கொண்டு புதைகுழிகள் அகழப்படுவதை நிறுத்தக்கூடாது.
  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பம் டி.என்.ஏ. மற்றும் பிற தடயவியல் ஆய்வுகள் சர்வதேச தரநிலைகளின்படி நடைபெற வேண்டும்.
  • அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்ற மேற்பார்வையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய தகவல் பகிர்வு மற்றும் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
  • எடுக்கப்படும் தடயங்கள் டிஜிட்டல் மயப்படுத்தி நிகழ்நிலையிலும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
  • 1998 காலப்பகுதிக்குரிய கிருஷாந்தி அவர்களது விசாரணை மீளத்தொடங்க வேண்டும்.
  • சோமரத்ன ராஜபக்ச வால் கூறப்பட்ட இடங்கள் அனைத்தும் அகழ்வாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல. அவை பல தசாப்தங்களாக நீடித்த அரசியல் வன்முறை, உள்நாட்டு ஆயுத மோதல், கிளர்ச்சி ஒடுக்குதல் மற்றும் கட்டாயக் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வரலாற்றின் பகுதிகளாகும்.

2023 ஆம் ஆண்டு இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் (ICES) வெளியிட்ட ஆய்வின்படி, 1992 முதல் 2022 வரை குறைந்தது 32 மனிதப் புதைகுழிகள் இலங்கையின் பல பகுதிகளில் பதிவாகியுள்ளன.

முக்கியமான மனிதப் புதைகுழிகள்

  1. சூரியகந்தை (1994)
  • கண்டுபிடிப்பு: 1994
  • பின்னணி: 1988 – 1989 ஜே.வி.பி. கிளர்ச்சியை ஒடுக்கிய காலம்.
  • காரணம்: காணாமல் போன மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள்.
  • நிலை: அகழாய்வு நடந்தாலும் முழுமையான பொறுப்புக்கூறல் ஏற்படவில்லை.
  1. செம்மணி (1998)
  • கண்டுபிடிப்பு: கிருஷாந்தி குமாரசுவாமி வழக்கில் தண்டனை பெற்ற படைவீரரின் சாட்சியத்தைத் தொடர்ந்து.
  • காரணம்: 1995 – 1996 காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.
  • நிலை: 1999 அகழாய்வில் சில எச்சங்கள் மீட்கப்பட்டன, 2025 – 2026 ஆம் ஆண்டுகளில் புதிய அகழாய்வுகள் மீண்டும் தொடங்கின.
  1. மாத்தளை (2012)
  • கண்டுபிடிப்பு: மாவட்ட மருத்துவமனை வளாகத்தில்.
  • மீட்கப்பட்ட எச்சங்கள்: 150க்கும் மேற்பட்டவை.
  • சர்ச்சை: கார்பன் காலக்கணிப்பு, chain of custody, மாதிரிகளின் நம்பகத்தன்மை.
  • நிலை: விசாரணை முழுமையான முடிவை எட்டவில்லை.
  1. மன்னார் – சதோசா (2013 – 2018)
  • மீட்கப்பட்ட எச்சங்கள்: 300க்கும் மேற்பட்டவை; குழந்தைகளின் எச்சங்களும் அடங்கும்.
  • சர்ச்சை: கார்பன் காலக்கணிப்பு முடிவுகள் மற்றும் அவற்றின் விளக்கம்.
  • நிலை: வழக்கு பல ஆண்டுகள் விவாதத்திற்குள்ளானது.
  1. கொக்குத்தொடுவாய் (2023)
  • கண்டுபிடிப்பு: முல்லைத்தீவு மாவட்டம்.
  • நிலை: அகழாய்வுகள் மற்றும் தடயவியல் ஆய்வுகள் தொடர்ந்தன; இறுதி முடிவுகள் அனைத்தும் இன்னும் முழுமையடையவில்லை.

இந்தப் புதைகுழிகளின் வரலாற்றைப் பார்த்தால், பல வழக்குகளில் சில பொதுவான அம்சங்கள் காணப்படுகின்றன:

  • கட்டுமானம் அல்லது வேறு பணிகளின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுதல்.
  • நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழாய்வு தொடங்குதல்.
  • ஆரம்பத்தில் ஊடக மற்றும் பொதுமக்கள் கவனம் அதிகரித்தல்.
  • தடயவியல் ஆய்வுகள், அல்லது கார்பன் காலக்கணிப்பு போன்ற அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுதல்.
  • பின்னர் நீண்டகால தாமதங்கள், நடைமுறைச் சர்ச்சைகள் அல்லது ஆதாரங்களின் பாதுகாப்பு (chain of custody) குறித்த கேள்விகள் எழுதல்.
  • பல வழக்குகளில் குடும்பங்கள் இன்னும் இறுதியான பதில்களைப் பெறாமல் இருப்பது.

Carbon Dating – அதன் எல்லைகள்

கார்பன் காலக்கணிப்பு (Radiocarbon Dating) என்பது ஒரு முக்கிய அறிவியல் கருவி. ஆனால் அது எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்காது.
அது ஒரு உயிரியல் மாதிரியின் தோராயமான வயதை மதிப்பிட உதவும். ஆனால்:

  • அந்த நபர் யார்?
  • அவர் எவ்வாறு உயிரிழந்தார்?
  • அவர் கட்டாயக் காணாமல் ஆக்கப்பட்டவரா?
  • அவர் போரின் பாதிக்கப்பட்டவரா?
    என்ற கேள்விகளுக்கு கார்பன் காலக்கணிப்பு மட்டும் பதில் அளிக்காது.
    எனவே, கார்பன் காலக்கணிப்பு முடிவுகள் தடயவியல், மனிதவியல், டி.என்.ஏ. மற்றும் சூழல் ஆதாரங்களுடன் சேர்த்தே மதிப்பிடப்பட வேண்டும்.

DNA பரிசோதனை.

குடும்பங்களுக்கு பதில் தரும் அறிவியல். கூட்டுப் புதைகுழி விசாரணையின் மிக முக்கியமான நோக்கம் எலும்புகளை எண்ணுவது அல்ல, அவற்றை அடையாளம் காண்பதே.
அதற்காக:

  • உறவினர்களிடமிருந்து DNA மாதிரிகள் பெறுதல்,
  • தேசிய DNA தரவுத்தளத்தை உருவாக்குதல்,
  • சர்வதேச தர ஆய்வகங்களில் பரிசோதனை நடத்துதல்,
  • குடும்பங்களுக்கு அறிவியல் அடிப்படையிலான முடிவுகளை வழங்குதல்
    போன்ற நடவடிக்கைகள் அவசியம்.

சர்வதேச தரநிலைகள்

செம்மணி போன்ற வழக்குகளில் பல சர்வதேச வழிகாட்டுதல்கள் பொருந்துகின்றன.
1) Minnesota Protocol (2016).
சட்டவிரோத மரணங்களை சுயாதீனமாக விசாரிப்பதற்கான ஐ.நா. வழிகாட்டுதல்.

2) International Convention for the Protection of All Persons from Enforced Disappearance (CED).
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடுதல், அடையாளம் காணுதல் மற்றும் குடும்பங்களுக்கு உண்மையை வழங்குதல் அரசின் கடமை என்பதை வலியுறுத்துகிறது.

3) Bournemouth Protocol.
கூட்டுப் புதைகுழி விசாரணைகள் மனித உரிமை மையப்படுத்தப்பட்ட, அறிவியல் மற்றும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான நடைமுறை வழிகாட்டுதல்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பல மனிதப் புதைகுழிகள் இன்னும் தீர்க்கப்படாத கேள்விகளை விட்டுச் சென்றுள்ளன.
சில வழக்குகளில்:

  • நீண்டகால நீதிமன்ற தாமதங்கள்,
  • தடயவியல் தொடர்பான முரண்பாடுகள்,
  • ஆதாரங்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள்,
  • குடும்பங்களின் நம்பிக்கையின்ம
    போன்ற பிரச்சினைகள் எழுந்தன.

இந்த அனுபவங்களே இன்று செம்மணி விசாரணை குறித்து அதிக வெளிப்படைத்தன்மை, சர்வதேச விசாரணை கோரப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளன.

செம்மணி என்பது தமிழர் மீதான இனவழிப்பின் சாட்சி, கொடூரங்களின் உறைவிடம். இந்த முறை விசாரணை அறிவியல், சட்டம் மற்றும் வெளிப்படைத்தன்மை, சர்வதேச நீதி விசாரணை அடிப்படையில் முழுமையாக முன்னெடுக்கப்பட்டால், அது செம்மணிக்கான நீதியை மட்டுமல்ல, இலங்கையின் அனைத்து மனித புதைகுழி விசாரணைகளுக்கும் ஒரு புதிய தரநிலையை உருவாக்கும்.

ஆனால் அது நடைபெறாவிட்டால், மண்ணுக்கடியில் புதைந்திருப்பது எலும்புகள் மட்டுமல்ல. உண்மையும் நீதியும் ஆகிவிடும்.

Thanks Dr. உதயசீலன் கற்கண்டு.
24.07.2026

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

பிரான்ஸ் தமிழருக்கு 30 ஆண்டுகள் சிறை! நாட்டுக்கு அனுப்ப உத்தரவு!

யாழில் சிறுமி ஒருவருக்கு திருமண ஆசை காட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ் நீதிமன்றம்...

பிரான்சில் Dublin Transfer சிக்கல்: விரல் ரேகை விதி, சட்டபூர்வ வழிமுறைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Dublin Regulation) படி, ஒரு அகதி ஐரோப்பாவிற்குள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த அல்லது விரல் ரேகை (Eurodac...

ஊருக்கு போன இடத்துல பிறந்த நாள் கொண்டாட்டம்! இப்படியும் நடக்குது!

ஊரில பிறந்த நாள் ஒன்றுக்கு போனா,இரவு 9 மணியாச்சு, கேக் வெட்டினா பாடு இல்லை… இது என்னடா என்று சாப்பிட போன இடத்தில் கைக்கு எட்டினது...

பிரான்சில் கடும் எச்சரிக்கை! தமிழர்கள் அவதானம்! சுட்டெரிக்கப்போகும் வெயில்

பிரான்ஸ் மக்கள் மே மாத இறுதி முதல் இதுவரை மூன்று கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொண்டுள்ளனர். இப்போது நான்காவது வெப்ப அலை வரவுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள்...

பிரான்ஸ்: லாகூர்நெவ் பகுதியில் சுகாதார சீர்கேடு! 17 கடைகளுக்கு பூட்டு!

பாரிஸ் அருகே உள்ள சென்-சென்ட்-டெனிஸ் மாவட்டத்தின் லா கோர்னவ் (La Courneuve) நகரில் உள்ள ‘Quatre-Routes’ பகுதியில், Paul-Vaillant-Couturier வர்த்தகத் தெருவில் கடந்த ஜூலை மாதத்...

பிரித்தானியா வெப்ப அலை பாதிப்பு! வரும் அடுத்த கட்டம்!

பிரித்தானியாவில் 2026 மே,ஜூன் மாதங்களில் பதிவான சாதனை வெப்ப அலை காரணமாக,இதுவரை ஆயிர கணக்கான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும்...

More Articles Like This