ஐரோப்பாவில் முதல் நாடாக பிரான்சில் தடை! முக்கிய காரணங்கள்!

Must Read

பிரான்ஸ் நாடாளுமன்றம் 15 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கு சமூக வலைதளங்களை தடைசெய்யும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல் நாடாக இந்த சட்டம் வரும் செப்ரெம்பர் முதல் அமுலுக்கு வருகின்றது.இனி தொடங்கப்படும் புதிய கணக்குகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் இப்போதுள்ள கணக்குகளும் மூடப்படும் எனவும் வயது சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.அத்துடன் உயர் பாடசாலைகளில் தொலைபேசி தடை உள்ளிட்டவை அடங்கும்.

இது குறித்து வரவேற்று தனது மகிழ்ச்சியை தெரிவித்த மக்ரோன்,இந்த தடைகள் குழந்தைகளின் மனநலன், பாதுகாப்பை உறுதி செய்யும் என தெரிவித்தார். அதோடு வழமை போல எதிர்கட்சிகள்,இடதுசாரிகள் இதனை கண்டித்துள்ளதுடன் அரசியல் சாசனத்திற்கு முரணானது என விமர்சித்துள்ளனர்.

இந்த சட்டம் குழந்தைகளின் மனநலப் பிரச்சினைகள், தூக்கக் குறைபாடு, சைபர் புல்லிங் மற்றும் அடிமைத்தனம் போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசு ஏற்கெனவே பள்ளிகளில் மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தியுள்ள நிலையில், இந்த புதிய சட்டம் டிக்டாக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் உள்ளிட்ட தளங்களுக்கு வயது சரிபார்ப்பு தொழில்நுட்பத்தை கட்டாயப்படுத்துகிறது.

உலக அளவில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகளை பரிசீலித்து வரும் சூழலில், பிரான்ஸ் ஐரோப்பாவில் முன்னோடியாக உருவெடுத்துள்ளது. சமூக ஆர்வலர்கள் இதை வரவேற்கும் அதேவேளையில், சில தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுத்துவதில் சிரமம் இருப்பதாகக் கூறுகின்றன. இந்த சட்டம் எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

பிரான்ஸில் அகதி விண்ணப்பம் நிராகரிப்பு: மாற்று வழிகள் மற்றும் உதவி அமைப்புகள் 

பிரான்சில் OFPRA மற்றும் CNDA ஆகிய இரண்டிலும் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் Déboutés de  l'asile என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு வழக்கமாக OQTF (வெளியேற்றல் உத்தரவு)...

பிரான்சில் 10 வருட கார்டு, குடியுரிமை: பிரெஞ்சு தேர்வு, புதிய சட்ட மாற்றங்கள்

பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான குடிவரவுச் சட்டத்தில் (Loi Immigration) செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்களின்படி, ரெசிடென்ஸ் கார்டுகள் மற்றும் குடியுரிமை பெறுவதற்கான பிரெஞ்சு மொழித் தகுதிகள் (Language...

ஓடிஸியிலிருந்து நம்மை அறிதல்

நேற்று கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஹோமரின் ஓடிஸியை நானும் ஜீவியும் திரையரங்கில் சென்று பார்த்தோம். அதி அற்புதமான திரை அனுபவத்தையும் அதற்கீடான ஆழமான சிந்தனை அருட்டல்களையும்...

பிரான்ஸ் தமிழருக்கு 30 ஆண்டுகள் சிறை! நாட்டுக்கு அனுப்ப உத்தரவு!

யாழில் சிறுமி ஒருவருக்கு திருமண ஆசை காட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ் நீதிமன்றம்...

பிரான்சில் Dublin Transfer சிக்கல்: விரல் ரேகை விதி, சட்டபூர்வ வழிமுறைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Dublin Regulation) படி, ஒரு அகதி ஐரோப்பாவிற்குள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த அல்லது விரல் ரேகை (Eurodac...

ஊருக்கு போன இடத்துல பிறந்த நாள் கொண்டாட்டம்! இப்படியும் நடக்குது!

ஊரில பிறந்த நாள் ஒன்றுக்கு போனா,இரவு 9 மணியாச்சு, கேக் வெட்டினா பாடு இல்லை… இது என்னடா என்று சாப்பிட போன இடத்தில் கைக்கு எட்டினது...

More Articles Like This