தமிழர் சமையல் கலை – ஒரு பார்வை

Must Read

சமையல் + வாழ்வும்

இன்றைய காலங்களில் சமையல் என்பது சில குறிப்பிட்ட இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம் சில நிமிடங்களில் தயாராகி விடுகின்றன.இல்லையெனில் சாப்பாட்டு கடைகளில் சென்று அதே போல் இயந்திர கதியில் தயாரிக்கப்பட்டவற்றை வேகமாக சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு ஓடி விடுகிறார்கள் மக்கள்..வீட்டில் என்றாலும் வேலை செய்யும் மனைவி வேகமாக வேகமாக ஏற்கனவே குளிர்சாதன பெட்டியில் வைத்ததை எடுத்து வேக வைத்து அல்லது சிறு சமையலை வேக வேகமாக செய்து சாப்பிட்டுவிட்டு பார்சலும் கட்டி கொண்டு சென்று சாப்பிடுவதாக கழிகின்றது…

இதனையும் தாண்டி வீட்டில் சமைக்கும் பெண்களும் டீவி,யூடிப் நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு சமைப்பது என மனிதர்களின் அடிப்படை தேவையும் பிரதான சக்தி மூலமுமான உணவு இன்று இவ்வாறு அதன் உயிரோட்டத்தை இழந்து வருகின்றது.

எப்படி என்ன செய்ய வேண்டும்..?

உணவை நாம் எமது கையால் எவ்வளவுக்கு எவ்வளவு தயாரிக்கின்றமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவை அதிக உயிரோட்டமாகின்றன.சமையலுக்கு தேவையான விறகுகளை அழகாக கொத்தி வைக்கின்றீர்கள்,அடுப்பில் விறகுகளை வைத்து தீ மூட்டுகின்றீர்கள்,சமையலுக்கு தேவையானதை ஒவ்வொன்றாக ஓரிடத்தில் ஆர அமர்ந்து செய்ய வேண்டும்.சமையலில் போதுமான முயற்சியும் நேரமும் கொடுக்கும் போதே அவை அதிக உயிரோட்டம் பெறுகின்றன.இத்தகைய முயற்சியை நாம் துறந்து இயந்திரமான சமையலை செய்வதால் வாழ்வின் சமையல் உணவால் கிடைக்கும் இன்பங்களை இழக்கிறோம்,உயிரோட்டத்தை தவறவிடுகிறோம்…

உலகில் நம்மை சுற்றி நடப்பவற்றில் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நேரம் கொடுக்கிறமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவை உயிரோட்டமாக இருக்கும்.

எங்கே எப்படி ஆரம்பிப்பது..?

உங்கள் வீட்டு சமையல் அறையில் இருந்து உங்கள் வாழ்க்கையை சரி பண்ண தொடங்குங்கள்.அதுதான் சரியாக இருக்கும்.சமையல் அறை விறகில் சமைக்க கூடியதாக முடிந்தவரை மரபு கட்டிட முறையில் கட்டி கொள்ளுங்கள்,இல்லையென்றால் இடித்து கட்டி கொள்ளுங்கள்.நின்ற நிலையில் அவசரமாக சமையல் செய்யும் இன்றைய சமையல் அறை உள்கட்டுமானங்களை முழுமையாக தவிர்த்துவிடுங்கள்,
மனிதர்களின் அசெளகரியத்தின் மறுபக்கத்தில்தான் மகிழ்ச்சியும் அபரிமிதமான வாழ்வும் இருக்கின்றது.

இருந்த நிலையில் விறகால் சமைக்க கூடியவாறு சமையலறையை வடிவமைத்து கொள்ளுங்கள்..காற்றோட்டமாக மேற்கூரை சற்று உயரமாக,போதிய இடவசதி கொண்ட மண்ணாலான/மண் டைல்ஸ் [Brick mud tiles] சமையல் உபகரணங்களை முடிந்தளவு மண் சட்டிகள்,ஓலை பெட்டிகள் என இயற்கையாக வைத்து கொள்ளுங்கள்.. அவற்றை வீட்டில் நீங்களாக செய்து கொள்ளுங்கள் [10 வருடங்கள் முன்னர் வரை எம் பாட்டிகள் அவற்றை தாங்களே செய்து வந்தனர்]

சமையல் செய்யும் உணவுகள் முடிந்தவரை சிறுதானிய உணவுகள்,உங்கள் மண்ணில் சொந்தமாக இயற்கையாக விளைவித்த மரக்கறிகள் எனவும் செயற்கை சுவையூட்டிகள் பாவனையற்றதாகவும் பார்த்து கொள்ளவேண்டும்.

இவ்வாறாக சரியாக சமையலறையை உருவாக்க தெரிந்து பெண்கள் சமையலை சரியாக செய்வார்கள்,குடும்ப நன்மை,அதனூடாக சமூக நன்மை,உலக நன்மைகளை மனதில் வைத்து உணவு ஊடாக அவரவர் குடும்பங்களுக்குரிய சக்தி செலுத்தப்பட்டு கொண்டிருக்கும்,பல குடும்பங்கள் இணைந்து சமூகமும் பல சமூகங்கள் சேர்ந்து நாடும் பல நாடுகள் சேர்ந்து உலகமும் சரியாக இயங்கி கொள்ளும்.இவ்வாறாக மொத்த உலகத்துக்குரிய இயங்கியல் சமையலறை,உணவு,அதாவது ஒரு பெண்ணிலிருந்தே பிறக்கின்றது…

இதனை தவிர்த்து.. வேகமான நவீன சமையல்களும்,கவன குறைவான சமையல்களும் இயந்திரதனமாக சக்தியை மனிதர்களுக்கு கடத்தி விடுகின்றன.இந்த சக்தியை பெற்று கொள்ளும் குடும்ப சமூக மனிதர்கள்,இயந்திரங்கள் போன்ற குடும்ப,சமூக உலக வாழ்வினுள் கட்டுபட்டு கிடப்பார்கள்.அங்கு உயிரோட்டம் கேள்விகுறியாகி விடுகின்றது.

முந்தைய கட்டுரை
அடுத்த கட்டுரை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

கனடா : கனடாவில் தவறாகப் பயன்படுத்தப்படும் தமிழ் சிறுமிகள்! பெற்றோர் அவதானம்!

கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை! கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்துச் சிறார்களின் எதிர்காலத்தைப் பலிக்கடாவாக்கும் நிகழ்வுகளுக்கும்...

உணவு – உலக இயங்கியல்

மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்…உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ...

அறிவும் அழிவும்

உலகில் வாழ்வதற்கு எவருக்கும் அறிவு தேவைப்படுவதில்லை..அதாவது நீங்கள் அறிவு என நினைக்கும் எதுவுமே தேவைப்படுவதில்லை. மனிதர்கள் உட்பட ஒவ்வொரு உயிருக்குமே அதற்கு வாழ தேவையான அறிவு...

வேலையை எப்படி செய்வது?

உங்கள் வேலையை செய்யுங்கள்,செவ்வனே செய்யுங்கள்.சிறியதோ பெரியதோ சரியாக செய்யப்படும் வேலைகளே உலகில் உன்னதமானது.நீங்கள் மேசை துடைப்பவராக இருந்தாலும் சீரான கவன குவிப்பு,ஒழுக்கத்தின் மூலம் அந்த வேலையை...

ஆவதும் பெண்ணாலே அழிவதும்…

உலகம்,பல கண்டங்கள்,பல நாடுகள்,பல நகரங்கள்,பல ஊர்கள்,வீடுகள் என்று பல பரிமாணங்களாக வெளியில் தெரிந்தாலும் அதன் மூலம் அலகு ஒரு குடும்பமாகும்.குடும்பத்தின் மூலம் பெண்ணாகும்.அத்தனை ஆரம்பமும் பெண்ணில்...

குடும்ப வாழ்வு சொல்லும் அர்த்தம்

சமூகம் குடும்பங்களினால் ஆனது..குடும்பங்கள் ஆண் பெண் என்ற தனி மனிதர்கள் ஒன்று சேரும் போது உருவாகின்றது.தனிமனிதர்கள் குடும்பம் என்ற அமைப்பினூடாகவே சமூகத்தை படைத்து நாடாக்கி உலக...

More Articles Like This