தற்சார்பு தேசத்தை கட்டுதல்

Must Read

எமது நோக்கம்

அவசர கதியில் வேகமாக அறியாமை மற்றும் அகந்தையில் அழிவு பாதையில் செல்லும் சமூகத்தில் இயற்கையுடன் இயைந்து வாழும் விருப்பத்துடன் உள்ள மக்களை ஒருங்கிணைத்து விவசாயம்,அறிவியல் பொருளாதாரம் என பல்தரப்பட்ட ஒரு தற்சார்ப்பு தேசத்தை கட்டியெழுப்பி முடங்கி நிற்கும் உலகிற்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

எமது திட்டங்கள் அனைத்தும் இயற்கையை அடிப்படையாக கொண்டு அந்தந்த மண்ணுக்கு ஏற்ற வகையில் அம்மக்களினூடாக அம்மக்களுக்கு செய்து முடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.

மனித அடிப்படைதேவைகளான உணவு,உடை,வீடு என்பவற்றை எமது மக்கள் தமது சூழலில் இருந்து தமக்கு தாமே உருவாக்கி கொள்ளும் வகையில் அமையும்படி திட்டங்கள் செயன்முறைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

விவசாயம்-

உணவு என்றால் தற்சார்ப்பு விவசாயம்,இயற்கை விதைகள்,இயற்கை பசளை,மனிதர்கள் சேர்ந்து உழைத்தல்,பண்டமாற்று முறையில் பகிர்ந்து எமக்குள் என்று முற்றிலும் மொத்த கேள்வியும் தேவையும் எம்மிடமே இருக்குமாறு பார்த்து கொள்ளும்படியாக இருக்கும்.இயற்கை விதை சுழற்சி,இயற்கை பசளை மாதிரிகளை தயாரித்தல்,உழவுக்கு தேவையான மாடுகளை வளர்த்தல்,பால்,பசளைகளை பெறுதல்,நிலங்களை பண்படுத்தல்,அடுத்த தலைமுறை விவசாயிகளை உருவாக்குதல்,இயற்கைக்கு ஒத்த புதிய தொழில்நுட்பங்களை கண்டறிதல் என்று அத்தனை செயன்முறைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு எமக்குள்ளயே எம்மக்களை வைத்து கொள்ளும்படி இருக்கும்.

வீடு- மக்களுக்கு தேவையான வீடுகளை முழுமையான இயற்கை வளங்களை எமது மண்ணிலுள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டி கொள்ளுதல்.செங்கல் உற்பத்தி,ஓடு உற்பத்தி,நிலகற்கள்,சுண்ணாம்பு,களிமண்,மர தளபாடம்,பனை என்று எமது வளங்களை அளவாக பயன்படுத்தி இயற்கைக்கு இசைவான அமைப்பில் வீடுகளை நமக்கு நாமே உருவாக்கி கொள்ளுதல்,நான்கு பேர் சேர்ந்தால் நான்கு குடும்பத்துக்கும் நான்கு வீடுகளை கட்டி கொள்ளலாம்.

மேலும் அடுதடுத்த மனித தேவைகளான மருத்துவம்,கல்வி,விளையாட்டு என ஒவ்வொன்றாக எமது மண்ணிற்கு ஏற்ற வகையில் ஏற்கனவே இருந்த அருகி வருகின்றன அவற்றை துரித கதியில் மீட்டு எடுத்து கொள்ளலாம்.தவிர உலகில் நடைமுறையில் உள்ள இயற்கையான நல்ல திட்டங்களையும் பரிசீலித்து கொள்ளலாம். [மேலதிகமாக]

இங்கு வீடு,விவசாயம்,மருத்துவம்,கல்வி,விளையாட்டு,இறையியல் என சமூக தேவை கூறுகள் ஒவ்வொன்றுமே ஒன்றொடோன்று இணைந்து ஒரு வாழ்வியல் இயங்க சங்கிலி போன்றே அமைத்து கொள்ள வேண்டும்.அவை எல்லாமே இயற்கையை மையப்படுத்தி இருக்க வேண்டும்.உதாரணமாக ஒரு வீட்டில் தெருவில் உள்ள ஒருவருக்கு வீடு கட்ட தெரிந்திருக்க வேண்டும்,விவசாயம் தெரிந்திருக்க வேண்டும்,மருத்துவம்,கல்வி,விளையாட்டு என இவ்வாறாக ஒவ்வொன்றும் எல்லாருக்குமான ஒன்றாக இருக்க வேண்டும்.

இந்த திட்டங்களின் ஒட்டு மொத்த விளைவாக ஏற்பட போகும் பயன்கள்

1.முழுமையான ஆரோக்கிய உணவு,உள்ளூரிலயே பண்டமாற்று முறையில் கிடைக்கும்.தொடர்ச்சியான இயற்கை விதைகள்,பசளைகள் என்று எல்லாமே எம் கையில் அதாவது எமது மண் விவசாயம் எம் கட்டுபாட்டில் இருக்கும்.பணபயிர்கள்,பெரிய தோட்டங்கள்,தோப்புக்கள் விடுத்து மண் வளத்தினை பேணும் சிறுதானிய பயிர்கள் அதிகளவில் முழுமையாக ஊக்குவிக்கப்படும்.உணவு தேவைக்கும் ஆரோக்கியத்துக்கும் முன்னிலை அளிக்கப்படும்.

2.இயற்கை சார்ந்து முழுமையான கட்டிடகலை உருவாக்கப்படும்,இயற்கை முறையிலான காற்று வாங்கும் உயிர் உள்ள வீடுகள் இங்குள்ள மக்களை கொண்டே அவர்களுக்கானது கட்டப்படும்.நாட்டை மையப்படுத்தி வீடுகள் கட்டப்படும். வீட்டை சுற்றி பயன்தரு மரங்கள்,பழ மரங்கள் என்று முடிந்தவரை வீட்டு தேவைகளுக்குரிய அத்தனை வகை மரங்களும் வைத்து கொள்ளும்படி இருக்கும்.

இயற்கையை மையப்படுத்தி இயங்குவதால் எம்மை சுற்றி நடக்கும் (கால்நடை) தூரத்தில் தேவையான எல்லாவற்றையும் பெற்று கொள்ளலாம்.வாழ்நாளில் போக்குவரத்துக்கு செலவாகும் நேரம் அத்தனையும் மிச்சம்! இயற்கை சார்ந்த பகுதிகளில் நீங்கள் நடந்து செல்வது நேரத்தை மறக்கடிக்க செய்து விடும்,நோய்நொடிகளும் அண்டாது.

ஆண் பெண்கள் சமத்துவம் அவர்கள் இயல்புகுரிய முன்னுரிமை கொடுப்பதன் மூலம் உலக இயங்கியலை குடும்ப கட்டமைப்பு பலப்படுத்தும் ஒற்றை நோக்கில் இருக்கும்…பலமான இயல்புகளை கொண்ட தனி மனிதர்களான ஆணும் பெண்ணும் பலமான குடும்ப அமைப்பை உருவாக்கி கொள்வார்கள்.

3.இயற்கையுடான உறவு,இடை தொடர்புகளை பேணும்,மனித உறவுகள்,மெய்யியல்,இறையியல்,இயற்கை அறிவியல்,இயற்கை மருத்துவம் என மிகவும் நுணுக்கமான மண்ணுக்கேற்ற கல்வி அமைப்பு காணப்படும்.இதன் மூலம் போட்டிக்கு ஓடுதல்,பரீட்சை புள்ளிகள்,பாடமாக்குதல்,அதிகாரம்,அதிகமான பாடசாலை நேரம்,வகுப்பு சிறைகள்,வரிசைகள்,சீருடைகள்,மன அழுத்தங்கள் என எதுவும் இருக்காது.

பாடசாலைகள் கட்டிடங்களில் இல்லாது ஆக்கப்பட்டு சிறுது சிறிதாக பிரிக்கப்பட்டு அந்தந்த தெரு திண்ணைகளுக்கு மாற்றப்படும்,அவரவர் மண்ணுக்கு மரபிற்கு ஏற்றவை மட்டும் மட்டுபடுத்ப்பட்ட நேரத்தில் அந்தந்த வயதினருக்கு ஏற்ற வகையில் செயற்பாட்டு கல்வியாக முன் உதாரணங்களை வைத்தும் இயற்கையில் இருந்தும் அவர்களாக கற்று கொள்ளும்படி அமைக்கப்படும்.

4.தாள் பணத்திற்குரிய தேவை,காசு சேர்த்தல்,வங்கி,வட்டி என்பவற்றுக்குரிய தேவை இல்லாமல் போகும்,ஒன்றுக்கும் உதவாத தங்க விற்பனைகள்,பரிமாற்றங்கள்,சமூக குற்றங்கள் முழுமையாக கட்டுபாட்டில் இருக்கும்.பொருளாதார சீரழிவு,பணவீக்கம் எதுவுமே எக்காலத்துக்கும் எம்மை அண்டாது.இங்கு எல்லாவற்றையும் இயற்கையாக உருவாக்கி கொள்வதால் வெளியில் இருந்து கப்பல் வரும் பெற்றோல்,டீசல் வரும் என விடுப்பு பார்க்கும் வேலை இருக்காது.முக்கியமாக வரிசைகளில் நிற்க வேண்டிய தேவை இருக்காது.

மிக குறைந்த அளவு சில்லறை நாணயங்களே புழக்கத்தில் இருக்கும்,வங்கி அமைப்பு முற்று முழுதாக விதை வங்கியாக மாற்றப்படும்.[அதிக விதை வைப்பிலிடுபவர்கள் பெரிய பணக்காரர்]
[ஒரு கிலோ அரிசி/எதாவது ஒரு விளைபொருள் கொடுத்து ஒரு ஐபோன் வாங்க கூடிய நிலை காணப்படும்]

5.உடல் சார்ந்த விஞ்ஞானமான யோகா,தியானங்கள்,நீச்சல்,தற்காப்புகலைகள்,போர் பயிற்சி,விளையாட்டுக்கள் என்பன முறையாக அனைவருக்கும் கற்பிக்கப்படும்.
உடல் மனம் ஆன்மாவை தொடும் அளவான பொழுது போக்குகள், கலை என மண்ணுக்குரிய வகையில் உருவாக்கப்பட்டு/மீட்டெடுக்கப்பட்டு நடைமுறைப்பட்டுத்தப்படும்.

6.தமிழ் வரலாறு பண்டைய குடி மக்கள் மற்றும் ஆழமான மெய்யியல் பார்வைகளின் படி, முன்னோர் வழிபாடு,நடுகல் வழிபாடுகள் என்பன தமிழர்களுக்குரிய மதமாக பிரகடனம் செய்யப்படும்.தவிர இயற்கை வழிபாடுகள்,நன்றி செலுத்தல்களும்,தமிழர் பாரம்பரிய சடங்குகளும் முறைப்படுத்தி பேணப்படும்.முடி வரலாறுகள் பற்றிய போதிய விளக்கம் மக்களுக்கு கொடுக்கப்பட்டு காலபோக்கில் முழுமையாக இல்லாது ஒழிக்கப்படும்..

7.நூலகங்கள்,விளையாட்டு திடல்கள் மிகபெரிதாக அதிகமாக இருக்கும்,திண்ணை வீடுகள்,மரங்கள் சூழ்ந்த வீதிகள்,ஏரிகள் குளங்கள்,மாட்டு வண்டில் பிரயாணங்கள்,கிழமையில் ஒரு நாள் ஊரே சேர்ந்து நல்ல திரைப்படம்,சரியான தமிழ் உச்சரிப்பில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் ஒலிக்கும் வானொலிகள் என்று கட்டமைக்கப்பட்டிருக்கும்.மின்சாரம் மிக குறிப்பிட்ட தேவைக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கென கட்டுபடுத்தப்பட்டிருக்கும்.

8.உடல் சார்ந்த விஞ்ஞானமான யோகா,தியானங்கள்,நீச்சல்,தற்காப்புகலைகள்,போர் பயிற்சி,விளையாட்டுக்கள் என்பன முறையாக அனைவருக்கும் சிறு வயது முதல் கற்பிக்கப்படும்.கட்டு கோப்பான ஒழுக்கம்,கவனம் சிதறாமையை அடுதடுத்த தலைமுறைகளுக்கு வளர்த்தெடுத்தலை நோக்கமாக கொண்டு இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று இடைதொடர்புகளுடன் அமையும்…

9.மக்கள் தனிதனி மக்கள் நேரடி பங்களிப்பில் 100% ஒவ்வொரு மக்களும் பிரதிநிதிகள் என உருவாகும் அரசு முறை ஒன்று அறிமுகம் செய்யப்படும்.மக்களுக்கே அதிக உரிமைகள்,பொறுப்புகளை சுழற்சி முறையில் கொடுப்பதன் மூலம் முடி அரசு என்ற அமைப்பு ஒன்று இருப்பதற்குரிய தேவையை இல்லாமல் இது அமைக்கப்படும்…

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

கனடா : கனடாவில் தவறாகப் பயன்படுத்தப்படும் தமிழ் சிறுமிகள்! பெற்றோர் அவதானம்!

கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை! கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்துச் சிறார்களின் எதிர்காலத்தைப் பலிக்கடாவாக்கும் நிகழ்வுகளுக்கும்...

உணவு – உலக இயங்கியல்

மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்…உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ...

தமிழர் சமையல் கலை – ஒரு பார்வை

சமையல் + வாழ்வும் இன்றைய காலங்களில் சமையல் என்பது சில குறிப்பிட்ட இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம் சில நிமிடங்களில் தயாராகி விடுகின்றன.இல்லையெனில் சாப்பாட்டு கடைகளில்...

அறிவும் அழிவும்

உலகில் வாழ்வதற்கு எவருக்கும் அறிவு தேவைப்படுவதில்லை..அதாவது நீங்கள் அறிவு என நினைக்கும் எதுவுமே தேவைப்படுவதில்லை. மனிதர்கள் உட்பட ஒவ்வொரு உயிருக்குமே அதற்கு வாழ தேவையான அறிவு...

வேலையை எப்படி செய்வது?

உங்கள் வேலையை செய்யுங்கள்,செவ்வனே செய்யுங்கள்.சிறியதோ பெரியதோ சரியாக செய்யப்படும் வேலைகளே உலகில் உன்னதமானது.நீங்கள் மேசை துடைப்பவராக இருந்தாலும் சீரான கவன குவிப்பு,ஒழுக்கத்தின் மூலம் அந்த வேலையை...

ஆவதும் பெண்ணாலே அழிவதும்…

உலகம்,பல கண்டங்கள்,பல நாடுகள்,பல நகரங்கள்,பல ஊர்கள்,வீடுகள் என்று பல பரிமாணங்களாக வெளியில் தெரிந்தாலும் அதன் மூலம் அலகு ஒரு குடும்பமாகும்.குடும்பத்தின் மூலம் பெண்ணாகும்.அத்தனை ஆரம்பமும் பெண்ணில்...

More Articles Like This