ஈழ தமிழருக்கு பொருந்தும் கரையான் – பாம்பு கதை

Must Read

ஒரு காட்டில் கரையான்கள் ஒன்று
கூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின.

அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. அன்றிலிருந்து கரையான்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு. இப்படியே ஒரு வருடகாலம் சென்றது. கரையான்கள்
புற்றை கட்டி முடித்தன. பாம்பு பேசியது.

”கரையான்களே! நீங்கள் கட்டிய புற்று அருமையாக இருக்கிறது. நான் ஒருமுறை உள்ளே சென்று பார்க்கட்டுமா?” என்று கேட்டது.

கரையான்கள் சம்மதித்தன. பாம்பு புற்றுக்குள்ளே சென்று பார்த்தது. பாம்பு வெளியேவரும் என்று கரையான்கள் காத்திருந்தன. அது வெளியே வரவில்லை. கரையான்கள் வெளியிலிருந்து பாம்பை கூப்பிட்டன.

”புற்று வசதியாக இருக்கிறது. இனி இது என்னுடையது. வேண்டுமென்றால்,
நீங்கள் இன்னொரு புற்றை கட்டிக்கொள்ளுங்கள். இங்கிருந்து கிளம்புங்கள், இல்லையென்றால் என் விஷத்துக்கு இரையாவீர்கள் என்று மிரட்டியது பாம்பு.

சோகத்தோடு கிளம்பின கரையான்கள். வழியில் சாதுவை சந்தித்து நடந்தவற்றை சொல்லி வருத்தப்பட்டன. சாது பாம்பிடம் பேசினார்.

”பாம்பே! புற்றை உருவாக்கிக்கொள்ளும் ஆற்றல் உனக்கில்லை. அடுத்தவன் உழைப்பை திருடுகிறாயே, அடுத்தவன் உழைப்பை பலத்தால் பெறுவது நியாயமல்ல என்றார்.

பாம்பு பேசியது.

சாதுவே! உலகத்தில் பலசாளிகள் வைத்ததுதான் சட்டம் என்பது உங்களுக்குத் தெரியாதா? பலசாளியிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தது.

கரையான்கள் அழுதுகொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்தன. சாதுவும் நகர்ந்தார். சில மாதங்கள் சென்றன.
பாம்பு தனது குடும்பத்தோடு புற்றில்
வசதியாக வசித்து வந்தது.

ஒரு நாள் பாம்பு தனது குட்டிகளோடு புற்றிற்கு வெளியில் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு வந்த பருந்து பாம்பை கொத்திக்கொண்டு பறந்தது. குட்டிகள் கதறின. வானத்தில் பறந்து கொண்டிருந்த பருந்து பொத்தென்று பாம்பை கீழே போட்டது.

பாம்பு விழுந்த இடம் சாதுவின் ஆசிரம வாசல். உயிர் பிரியும் தருவாயில்
சாதுவிடம் பேசியது பாம்பு.

சாதுவே! நான் இல்லாமல் குட்டிகளால்
வாழ முடியாது. ஆகவே என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியது.

அதற்கு சாது ‘பாம்பே! விதி சொல்லிக்கொடுக்கும் பாடம் ஒன்றைத் தெரிந்துகொள். வலிமை, பலம் என்பது நிரந்தரமல்ல. இன்று எவற்றையெல்லாம் பலமாக உணர்கிறாயோ, அவற்றையெல்லாம் நாளை பலவீனமாக உணர்வாய். அதே போல, இன்று பலவீனமாக பார்க்கப்படுபவை பலமாக மாறும் காலமும் வெகு தொலைவில் இல்லை.

ஆகையால், பலவானாக இருக்கும்போது பக்குவமாகவும், பிறருக்கு கெடுதல்
செய்யாமலும் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால் நீ அப்படி வாழவில்லை. கரையான் என்ற வலிமையில்லாத எதிரியை நீ தேர்ந்தெடுத்தாலும், பருந்து என்ற பலமான எதிரிக்கு பதில் சொல்லும் நிலைக்கு காலம் உன்னை தள்ளியிருக்கிறது”.

”பாம்பே! நிதர்சனமான ஒரு உண்மையைத் தெரிந்துகொள். அடுத்தவனை வருத்தி, அதை ரசிக்கும் உன் குணத்தை இந்த
உலகம் வேண்டுமானால் மறந்து போகலாம். ஆனால், நீ கீழே விழும்போது காலம் அதை உன் நினைவில் கொண்டு வரும்.

அப்போது அதை தாங்கும் சக்தி உனக்கோ, உன் சந்ததிகளுக்கோ இருக்காது. உன் சந்ததிகள் உன் பாவத்தை பங்காக பிரித்துக்கொள்வார்கள்” என்று சொல்லிவிட்டு சாது சென்றார்.

அதற்குப் பிறகு பாம்பு என்ன செய்தது என்பது நமக்கு முக்கியமல்ல. காரணம் காலம் அதை தன் பிடியில் எடுத்துச் சென்றுவிட்டது. பலம் பொறுந்திய ஒருவனின் அராஜகம், அகந்தை, கோபம் ஆகியவற்றை காலம் ஒருநாள் எடுத்துச் சென்றுவிடும். அப்போது உணர்ந்து பார்க்கலாம் என்றால் காலம் அதற்கு
இடம் தராது.

இந்ந கதையில் பாம்பு யார்? கழுகு யார் ? கரையான்கள் யார் என்று உங்கள் நாட்டு வரலாறை வைத்து யோசித்து பார்த்து கொள்ளுங்கள்!

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Latest News

கனடா : கனடாவில் தவறாகப் பயன்படுத்தப்படும் தமிழ் சிறுமிகள்! பெற்றோர் அவதானம்!

கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை! கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்துச் சிறார்களின் எதிர்காலத்தைப் பலிக்கடாவாக்கும் நிகழ்வுகளுக்கும்...

உணவு – உலக இயங்கியல்

மனிதர்கள் இரு வகையான உணவுகளை உண்பார்கள்…உலகில் பெரும்பாலான மக்கள் 90% சைவ-அசைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கிறார்கள்.. வெறும் 10% அல்லது அதற்கும் குறைந்த மக்களே சைவ...

தமிழர் சமையல் கலை – ஒரு பார்வை

சமையல் + வாழ்வும் இன்றைய காலங்களில் சமையல் என்பது சில குறிப்பிட்ட இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம் சில நிமிடங்களில் தயாராகி விடுகின்றன.இல்லையெனில் சாப்பாட்டு கடைகளில்...

அறிவும் அழிவும்

உலகில் வாழ்வதற்கு எவருக்கும் அறிவு தேவைப்படுவதில்லை..அதாவது நீங்கள் அறிவு என நினைக்கும் எதுவுமே தேவைப்படுவதில்லை. மனிதர்கள் உட்பட ஒவ்வொரு உயிருக்குமே அதற்கு வாழ தேவையான அறிவு...

வேலையை எப்படி செய்வது?

உங்கள் வேலையை செய்யுங்கள்,செவ்வனே செய்யுங்கள்.சிறியதோ பெரியதோ சரியாக செய்யப்படும் வேலைகளே உலகில் உன்னதமானது.நீங்கள் மேசை துடைப்பவராக இருந்தாலும் சீரான கவன குவிப்பு,ஒழுக்கத்தின் மூலம் அந்த வேலையை...

ஆவதும் பெண்ணாலே அழிவதும்…

உலகம்,பல கண்டங்கள்,பல நாடுகள்,பல நகரங்கள்,பல ஊர்கள்,வீடுகள் என்று பல பரிமாணங்களாக வெளியில் தெரிந்தாலும் அதன் மூலம் அலகு ஒரு குடும்பமாகும்.குடும்பத்தின் மூலம் பெண்ணாகும்.அத்தனை ஆரம்பமும் பெண்ணில்...

More Articles Like This