பாரிஸ் கலவரங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளையோர்கள் முழுமையாகவிடுவிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.பெற்றோர் சந்திப்புகளின் பின்னர்,சில எச்சரிக்கைகளுடன் கூடியவகையில் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே எந்தவொரு வழக்குகளும் இல்லாத நிலையிலும் அவர்களின் வயதை கருத்தில் கொண்டும்எதிர்காலங்களில் சிக்கினால் என்ன நடக்கும் என்ற தீவிரமான எச்சரிக்கைகளுக்கும் பின்னரே வழக்கில்இருந்து பெற்றோர் சகிதம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பாரிஸ் வாசியான தமிழர் கருத்து தெரிவிக்கையில் வசிக்க வந்த இடங்களில் பெயரைகெடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலிதனம்,என்ன குழப்படி விடுறது என்றாலும் ஊருக்கு போய் விட்டுகொள்ளுங்கள்,இங்கே இருந்து அடுத்தவர்கள் பெயரையும் சேர்த்து கெடுக்காதீர்கள், அவனவன் 1000 பிரச்சினைகளுடன் கவலைகளுடன் வாழ்க்கையை கொண்டு செல்கிறான் என குறிப்பிட்டார்.
பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கும் தமிழ் ஏஜென்சிகள் மாதம் பல கோடிகளை உழைத்து தள்ளுவதாக சிலநம்பிக்கையான வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இவர்கள் இலங்கை இந்தியா மலேசியா பங்களாதேஷ் என்று கிழக்கு நாடுகள் பலவற்றை குறிவைத்து இயங்கிவருவதாகவும் சொல்லப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் அதிகளவாக இந்திய தமிழர்கள் இவர்கள் ஊடாக பிரான்ஸ் வரஆரம்பித்துள்ளனர்.ஈழதமிழர்களோடு ஒப்பிடும் போது இந்திய தமிழர்களுக்கு காசின் பெறுமதி அதிகம்என்பதால்,அவர்களால் ஏஜென்சி கேட்கும் தொகையை இலகுவாக கொடுக்க கூடியதாக உள்ளதாகசொல்லப்படுகின்றது.
உதாரணமாக இலங்கை காசு ஒரு கோடி என்றால்,இந்தியாவில் அது வெறும் 25-30 லட்சம்தான்.. இந்திய எட்டுகோடி தமிழர்களில் வாழ வழியில்லாமல் பரம்பரை சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு இதெல்லாம் சின்னஒரு காசு!
உங்கள் பிள்ளைக்கு எவ்வளவு பணம் வீடு வாங்க நீங்க வரி இல்லாமல் கொடுக்க முடியும்..?
ரியல் எஸ்டேட் சொந்த வீடு வாங்குவதற்கு எனது பிள்ளையின் தனிப்பட்ட பங்களிப்பைக் கட்ட நான் பணம்கொடுத்தால், வரி செலுத்தாமல் அவருக்கு எவ்வளவு கொடுக்க முடியும்? இந்த கேள்வி பிரான்ஸில் பலபெற்றோர்களுக்கு உள்ள ஒரு கேள்வியாகும்.
முதலாவது பண நன்கொடை, அதிகபட்சம் 31,865 யூரோக்கள். "உங்கள் சந்ததியினருக்கும்குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் கொடுக்க முடியும். கொடுப்பவர் 80 வயதுக்கு உட்பட்டவராகவும், பெறுபவர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்
இந்த நன்கொடை ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் புதுப்பிக்கத்தக்கது.இந்த தொகையை தந்தையும் தாயும்கொடுக்கலாம், எனவே இது தொகையை இரண்டால் பெருக்குகிறது. இந்த தொகை மொத்த வரி விலக்குமூலம் பயனடைகிறது. இது ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும்
இந்தத் தொகை பணமாக வழங்கப்படலாம், அசையும் சொத்து (கார், நகைகள்...), ரியல் எஸ்டேட் மற்றும்பத்திரங்கள் (பங்குகள், பங்குகள்...) ஆகியவற்றிலும் கொடுக்கப்படலாம். "ஒவ்வொரு பெற்றோரும் ஒருகுழந்தைக்கு 100,000 யூரோக்கள் வரை நன்கொடை கட்டணம் செலுத்தாமல் கொடுக்கலாம்.
எனவே ஒரு தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு 200,000 யூரோக்களை உரிமைகளில் இருந்து விலக்குஅளிக்கலாம். இந்த 100,000 யூரோக்கள் குறைப்பு ஒன்று அல்லது பல முறை பயன்படுத்தப்படலாம். இவ்வாறு, முதல் நன்கொடையின் போது குறைப்பு முழுமையாகப் பயன்படுத்தப்படாவிட்டால், இன்னும் 15 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் நிலுவைத் தொகையை நீங்கள் பயன்படுத்தலாம்" என்று பிரான்ஸ் வரிஇணையதளம் நினைவுபடுத்துகிறது.
ஒரு குழந்தை தனது பெற்றோரிடமிருந்து 200,000 யூரோக்கள் (100,000 x2) மற்றும் 127,460 யூரோக்கள்(31,865 x 4) அவரது நான்கு தாத்தா பாட்டிகளிடமிருந்து ஒவ்வொரு 15 வருடங்களுக்கும் நன்கொடை உரிமைஇல்லாமல் பெறலாம்...
பிரான்ஸில் மணமகன் கறுப்பாக இருப்பதாக கூறி சம்பந்த கலப்புடன் திருமணத்தை நிறுத்தி தமிழ் மணமகள்! முழுமையான சம்பவம் வீடியோவில் உண்டு..
https://youtu.be/sTBmQxgWK-Y
நீங்கள் கூட்டி+அள்ளிக்கொட்டி + கழுவித்துடைக்கும் வேலையில் கரைகண்டவரா...
அப்படியானால் இங்கே வேலைக்கு விண்ணப்பியுங்கள்...
இணைப்பை இங்கே +அழுத்தி உட்சென்றவுடன்....
"Agent de Propreté " என்ற பகுதியை அழுத்தி விண்ணப்பிக்கவும்⤵️
https://www.onetrecrute.com/accueil.aspx?LCID=1036
ℹ️🟡ஒப்பந்தத்தில் இங்கே வேலைசெய்து ஒப்பந்தம் முடிந்து வெளியேறும்போது 5000€ கொடுப்பார்களாம்...
இங்கே அழுத்தவும் முகவரியைக்காண⤵️
https://www.onet.fr/agence/onet-proprete-et-services-paris-nord/
முகவரி ⤵️
https://www.onet.fr/agence/onet-proprete-et-services-paris-c/
பிரான்ஸ் தமிழர்களிடமிருந்து புலிகளுக்காக சேர்க்கப்பட்ட பெருந்தொகை படத்தை வெள்ளையாக்கும்நோக்கிலேயே அண்மையில் அதிகமாக இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருவதாக விமர்சனம் ஒன்றுவைக்கப்பட்டுள்ளது.
இறுதி போரில் மக்களிடமிருந்து அதிகமான பணம் சேர்க்கப்பட்டு காணாமல் போனதாகவும்,அவை குறிப்பிட்டகாலம் வெளியில் எடுக்கப்படாமல் வைத்திருந்துவிட்டு தற்போது அவற்றை எடுத்து வெள்ளையாக்கி வருவதாகசொல்லப்படுகின்றது..
பிரான்ஸ் மக்களின் வெள்ளை பணத்தை , பதுக்கி கறுப்பாக்கிவிட்டு தற்போது மீண்டும் அவர்களை வைத்துவெள்ளையாக்கி வருவதாக சில அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எமது கருத்து: இது தொடர்பாக ஆதாரங்கள் இல்லாமல் யாரும் எதையும் பேச சொல்ல முடியும்.எந்தஆம்பிளையை மடக்கிறது என்றாலும் கடைசில சமூகத்தில் இருக்கிற "பெண் பலவீனம்" என்ற பதத்தை போல , இப்ப எது என்றாலும் இயக்க காசு என்ற ஓரு பல்லவி விடாமல் பாட ஒவ்வொரு நாட்டில் ஆட்கள்இருக்கிறார்கள்.
ஆனாலும் காலம் சரியானதை நிருபிக்கும்வரை நாம் காத்திருக்கதான் வேண்டும்..
இன்சுரன்ஸ் காப்பீட்டாளர்களின் தொழில்முறை கூட்டமைப்பு படி, கலவரத்தின் பின்னரான சேத கோரிக்கைஇப்போது 650 மில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த வாரம் எதிர்பார்க்கப்பட்ட 280 மில்லியனை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
ஜூன் 27 அன்று ஒரு போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்தைத் தொடர்ந்து நகர்ப்புறவன்முறை தொடர்பான சீரழிவு காப்பீட்டாளர்களுக்கு 650 மில்லியன் செலவாகும் என்று தொழில்முறைகூட்டமைப்பு செவ்வாயன்று மதிப்பிட்டுள்ளது,
இந்த நகர்ப்புற வன்முறையின் விலையில் பாதிக்கப்பட்ட தொழில் வல்லுநர்கள் மற்றும் உள்ளூர்அதிகாரிகளின் 3,900 சொத்துக்களைப் பற்றியது என்று பிரான்சின் காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்புளோரன்ஸ் லஸ்ட்மேன் ஒரு அறிக்கையில் மேற்கோள் காட்டினார்.
தொழில்முறை சொத்து மீதான உரிமைகோரல்கள் குறிப்பிடப்பட்ட 650 மில்லியன் யூரோக்களில் 55% மற்றும்உள்ளூர் அதிகாரிகளின் சொத்துக்கள் 35% என்று பிரான்ஸ் அஷ்யூரர்ஸ் கூறுகிறது.
ஜூலை 1 ஆம் தேதியிலிருந்தே, பொருளாதார அமைச்சர் புருனோ லு மெய்ர் காப்பீட்டு நிறுவனங்களைஅறிக்கையிடும் நேரத்தை நீட்டிக்கவும், விலக்குகளை குறைக்கவும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தொழில்வல்லுநர்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கவும் கேட்டுக் கொண்டார்.
பிரான்ஸ் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாபே தனது சொந்த ஊரான கேமரூனுக்கு சென்றிருந்தார்.. இது தொடர்பான காணொளி! இந்த கேமரூன்... மொழி தமிழருக்கு மிக நெருங்கிய ஒரு மொழியாகும்... கேமரூன்கள் பேசுவது அச்சு...
பிரான்ஸில் இருந்து யாழ் திரும்பிய தமிழ் இளைஞரை வீட்டுக்குள் எடுக்காமல் விரட்டி அடித்துள்ள சம்பவம்ஒன்று இடம்பெற்றுள்ள
குறித்த இளைஞர் பாரிஸில் இருந்து பல காலத்திற்கு பிறகு யாழ் திரும்பி வீட்டுக்கு பிள்ளைகள் மனைவியோடுசென்று கேட் ஐ திறந்த போது அவரது பெற்றோர் சகோதரிகள் எல்லாரும் சேர்ந்து திட்டி தீர்த்து வர வேண்டாம்என்று சொல்லியிருக்கிறார்கள்..
அதாவது அவர் மனைவி வளவுக்குள் வரவிடமாட்டோம் என்று சண்டை... ஏதோ சீதன சிக்கல் என்று கேள்வி! சகோதரனுக்கு பேசிய சீதன காசு பின்னர் மனைவி வீட்டாரால் கொடுக்கப்படவில்லையாம்,கேட்டதற்கு குறித்தஇளைஞர் வேண்டாம் என்று சொன்னதால் நாம் குடுக்கவில்லை என பெண் வீட்டார்கூறியிருக்கின்றனர்,இரண்டு பிள்ளை பிறந்தும் விடாம சீதன காசு மீதியை தர சொல்லி இளைஞர் குடும்பபெண்கள் மோதல்
சுற்றி எல்லோரும் அக்கம் பக்கத்தினர் பார்க்க,அந்த வீட்டு ஆண்கள் எல்லாம் அமைதியாக இருக்க,பெண்கள்அதாவது மகளிர் படையணி இந்த தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கின்றது..
இதனால் மனமுடைந்த இளைஞர்,மனைவி பிள்ளைகளை கூட்டி கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
கருத்து: வெளிநாடு போய் சகோதரன் காசில் நன்றாக இங்கு சாப்பிட்டு தூங்கிவிட்டு,அற்ப சீதன காசுக்காகசொந்த சகோதரனை திட்டி அவர் காசில் கட்டிய வீட்டுக்குள் வர விடாமல் கத்தி கூச்சல் போட்டு அர்ச்சனைசெய்வது எந்த விதத்தில் நியாயம்..?
இலங்கை நாடு முழுதும் அழிந்துவிடும் எனவும் அங்கு நடக்கும் மரணங்கள்,விபத்துக்கள்,அழிவுகள் எல்லாதுர்சம்பவங்களும் இதனை காட்டுவதாக பாரிஸ் சாமியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் தொடர்ச்சியான பிழையான எண்ணங்களும் செயல்களுமே இலங்கையை நரகமாக ஆக்கிகொண்டிருப்பதாகவும்,அந்த தேசம் இத்தனை பலிகளை எடுத்தும் இன்னும் அடங்கவில்லை எனவும்கூறியுள்ளார்.
இதற்கு பரிகாரமாக மக்கள் ஒழுங்கா மனம் திருந்தி வாழ்ந்தால் மட்டுமே நாடு மீளும் என்றும்,மக்கள் மனம்திருத்தவே இவ்வாறான அழிவுகளை நடக்குகின்றன என்றும் அழியிறவர்கள் அழிந்து மீதி திருந்துகிறவர்கள்திருந்தி சரியாக வாழும் காலம் உலகில் இலங்கையே சொர்க்கம் என்று கூறியுள்ளார்.
பக்தர் ஒருவரின் கேள்விக்கு விளக்கம் கொடுக்கும் போதே இதனை கூறியுள்ளார். அண்மைகாலமாக இந்தசாமியார் தனது கருத்துக்களால் பாரிஸில் வளர்ந்து புகழ்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது...
Saint-Brieuc இல், உள்ள உயர்நிலைப் பாடசாலையில் ஆயத்த வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல்ஆசிரியர், தனது மாணவர்களின் சவாலை ஏற்றுக்கொண்டார். அவர் இளங்கலையில் Bac தேர்ச்சி பெற்று19.32/20 மதிப்பெண் பெற்று கொண்டார்.
Saint-Brieuc இல், Côtes-d'Armor இல், இயற்பியல் மற்றும் வேதியியல் பேராசிரியரான பெனாய்ட்டெலிபைன், அவரது மாணவர்களால் இளங்கலை பட்டத்தை மீண்டும் பெறுவதற்கு சவால் விடப்பட்டார். அவர்19.32/20 என்ற சராசரியுடன் சித்தி பெற்று காட்டியுள்ளார்..
1994 இல் பிறந்த பேராசிரியர், ஏற்கனவே தனது பட்டப்படிப்பை திறமை சித்தியடைந்திருந்தார்.
ஒரு ஆசிரியராக, மாணவர்களுக்கு சித்தி அடைய சில அறிவுரைகளை கூறிய போது இரு மாணவர்கள் அறிவுரைகூறுவது இலகு,செய்வதுதான் கஷ்டம் என நகைசுவையாக கூறியுள்ளனர்.இந்த அறிவுரைகளை வைத்து நீங்க Bac எழுதி சித்தி பெற்று காட்டுங்கள் என்று கூறியுள்ளனர்.
அதனை சவாலாக ஏற்று எழுதிய அவர் இறுதியாக, இரண்டு சிறப்புத் தேர்வுகளில் 20/20 பெற்றார், பொறியியல்மற்றும் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல். பிரஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம், கணிதம் மற்றும்வரலாறு-புவியியல் ஆகியவற்றில் அதே மதிப்பெண் பெற்றார்.
பின்னர் தனக்கு சவால் விட்ட மாணவர்களை சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார்.. இப்படிதான் த்து அறிவுரைகளைவைத்து சித்தி பெறுவது என்று தானே செய்து காட்டியமை தனக்கு பெருமையாக உள்ளதாக தெரிவித்தார்.
லாச்சப்பல்: பிரான்ஸ் தமிழர்களில் கிட்டத்தட்ட 500 ஈழதமிழருக்கு மேல் தின குடிக்கு அடிமையாகியுள்ளதாகசில அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன...இவர்களில் வீசா குடியுரிமை கிடைத்தவர்கள்,குடும்பங்கள்உள்ளவர்களில் இருந்து சில மாதங்கள் முன்னர் வந்து இறங்கியவர்கள் வரை இருப்பதாக சொல்லப்படுகின்றது.
இவர்கள் விடிந்தது முதல் இரவு வரை குடிப்பதும் படுப்பதுமாக இருப்பதாகவும் ஆங்காங்கே கிடைக்கிறஇடங்களில் தங்குவதுமாக காலத்தை கழிப்பதாகவும் தெரியவந்துள்ளது.அண்மைகாலதாக குடியால் இறக்கும்தமிழர்களின் எண்ணிக்கை புலத்திலும் ஊரிலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது..
தவிர இவர்கள் மற்றவர்களுக்கும் பழக்கி,சமூகத்தை கெடுத்து கொள்வதுடன் இவர்களை நம்பி இருக்கும்குடும்பங்களையும் சீரழித்து விடுகிறார்கள் என்பதும் கண் முன்னே பார்த்து கொண்டுள்ள நிகழ்வுகள்...